மரபணுக்களால் டேனிசோவன்களின் புதிர் அவிழ்ந்தது!

இரஞ்சனி

வியாழக்கிழமை, ஆவணி 28, 2043  18:35 இதிநே
Thursday, September 13, 2012 18:35 IST

நமது மூதாதையர்கள் பற்றி அறிவது மிகவும் மகிழ்ச்சி கொடுக்கும் ஓர் செய்தி.

நியாண்டர்தால் (Neandertals) மக்களின் உறவாக இருக்கக்கூடும் என்று கருதும் டேனிசோவன் (Denisovan) இன மக்களைப் பற்றி சில புதிய செய்திகள் தெரிய வந்துள்ளன.

கற்கால இளம் பெண் ஒருத்தியின் படிம மிச்சத்திலிருந்து கிடைத்த மரபணுத் தரவுகள் இதுவரை இல்லாத அளவில் மரவு வழிப் பண்பியல் சார்ந்த செய்திகளுக்கு ஒரு முழுமையைக் கொடுத்திருக்கிறது. access

இந்தப் பெண்ணின் டிஎன்ஏ-விலிருந்து அவளுக்கும், அவளது குழுவினரான பண்டைய சைபீரியன்களுக்கும், நியாண்டர்தால் இன மக்களுக்கும் இடையேயான உறவுகள் பற்றி செய்திகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டேனிசொவன்ஸ் மரபணு நூலகத் தரவுகளின்படி இந்தப் பெண் ஒரு சிறிய ஜனத்தொகை உள்ள இனத்திலிருந்து வந்திருக்க வேண்டும்; இந்த இனம் மிக வேகமாக தெற்கு நோக்கி நகர்ந்து ஆசியாவில் பரவி இருக்கவேண்டும் என்று ஜெர்மனி லேயிப்ஜிக் என்ற இடத்தில் உள்ள மாக்ஸ் பிளாங்க் கல்லூரி மத்தியாஸ் மேயர் மற்றும் ச்வண்டே பெபோ தலைமையில் இயங்கி வரும் குழு கூறுகிறது. 

டேனிசொவன்ஸ் தங்களது மரபணுக்களை பாப்புவா நியூ கினியன்களுக்குக் கொடுத்ததாகவும் ஆசியர்கள், ஐரோப்பியர்கள், தென்அமெரிக்கர்களுக்குக் கொடுக்கவில்லை என்றும் ஆன்லைன் அறிவியல் இதழில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியான அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல், டேனிசொவன்ஸ் தங்களது வம்சாவளியை இன்றைய ஆஸ்திரேலிய பழங்குடியினருடனும், மேலனேசியன்ஸ் ஆகியோருடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற முந்திய ஆதாரத்தினை ஒட்டி இருக்கிறது. 

டேனிசொவன் விரல் படிமத்திலிருந்து விஞ்ஞானிகள் மரபணு அறிவுறுத்தல்களின் விரிவான தொகுப்பை மீட்டெடுத்து இருக்கிறார்கள்.
இந்தப் புதிய புலனாய்வின் மூலம், ஐரோப்பியர்களை விட ஆசியர்களும் தென் அமெரிக்கர்களும் நியாண்டர்தால் மக்களின் மரபணுவை அதிகம் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் வசித்தாலும் நியாண்டர்தால் மக்கள் கிழக்கு ஆசியாவிலுள்ள ஹோமோ செபியன்ஸ்-களுடன் சேர்ந்து அதிக அளவில் கலப்பினம் உருவாக்கி இருக்கக்கூடும். அல்லது கற்கால மனிதர்கள் ஐரோப்பாவிற்கு அதிக அளவில் வந்து சேர்ந்ததால் ஐரோப்பியர்களிடையே இவர்களது மரபணுக்கள் நீர்த்துப் போயிருக்கக் கூடும். access

“அழிந்து விட்ட நமது மிக நெருங்கிய உறவுகாரர்களிடமிருந்து பிரிந்த பின் நமது மரபணுக்களில் ஏற்பட்ட மிக முக்கிய மாற்றங்களை இப்போது நாம் பட்டியலிடமுடியும்” என்கிறார் பாபோ.

இன்றைய மக்கள் மற்றும் டேனிசொவன் இளம் பெண்ணின் டிஎன்ஏ க்களின் முதல் நிலை ஒப்பீடுகளின் வாயிலாக மனித சம்பந்தமுள்ள எட்டு மரபணுக்கள் அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவைகள் மூளையின் செயல் பாடுகளையும் – முக்கியமாக மொழி மற்றும் பேச்சு வளர்ச்சியையும் சுட்டிக்காட்டுகின்றன.

பண்டைய டிஎன்ஏ க்களை மீட்டெடுக்க மிகவும் முன்னேற்றமான வழிமுறைகள் இருந்த போதிலும் டேனிசொவன்ஸ் பற்றிய பரிணாம அடையாளம், மனிதக் குழுக்களுடன் அவர்களது தொடர்புகள் பற்றி இன்னும் சரியானபடி அறிய முடியவில்லை. சைபீரியா டேனிசொவா குகையில் தோண்டி எடுக்கப்பட்ட டேனிசொவன் படிமங்களான ஒரு விரல் எலும்பு மற்றும் இரண்டு பற்கள் சுமார் 50,000 வருடப் பழமையானவை.
முந்தைய ஆய்வில் விரல் படிமத்திலிருந்து ஓரளவுக்கு டிஎன்ஏ புனரமைப்பு செய்யப்பட்டது. இதிலிருந்து நியாண்டர்தால் மற்றும் டேனிசொவன்களுக்கு இடையேயான நெருக்கமான மரபணு இணைப்பு பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துது.

புதிய சாதனையை டேனிசொவன் டிஎன்ஏ 2.0. என்று சொல்லலாம். விடுபட்ட தரவுகளினால் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க திரு மேயரும் திரு பெபோவும் ஒரு முறையை வகுத்து இருக்கிறார்கள். டிஎன்ஏ இன்றியமையாத நூற்றாண்டுகளை குறைத்து விடுகிறது. ஆனால் புதிய முறை இந்த மீதமிருக்கும் துண்டுகளை ஒன்று சேர்த்து, உயிருடன் இருக்கும் நபரிடமிருந்து கிடைக்கும் டிஎன்ஏ வைப்போன்ற ஒரு முழுமையான, துல்லியமான டேனிசொவன் டி என் ஏ பதிப்பை ஒன்று சேர்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.

“மிகப் பழமையான மாதிரியிலிருந்து மிகச்சிறந்த, முழுமையான மரபுத் தொகுதிகளை உருவாக்கமுடியும் என்பது ஒரு சில வருடங்களிலேயே பண்டைய டி என் ஏ வரிசைப் படுத்துதலில் நாம் எத்தனை தூரம் வந்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது” என்று பெர்க்கிலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பரிணாம மரபியலர் திரு. ரஸ்மஸ் நீல்சன்.
“எப்போது, எங்கே இந்தக் கலப்பினங்கள் உருவாகின என்பது உயர்தரப் பண்புள்ள டேனிசொவன் டி என் ஏ வையும், இன்றைய மக்களின் பெருவாரியான மரபணு மாதிரியையும் ஒப்பிட ஆரம்பிக்கும்போது விளங்கும்”, என்கிறார் திரு நீல்சன். 

மேயரும் அவரது சகா பெபோவும் புதிய, மேம்படுத்தப்பட்ட டேனிசொவன் மாதிரியுடன் இப்போது வாழும் 11 நபர்களின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்த்தனர். இந்த 11 நபர்களில் 5 ஆப்பிரிக்க பழங்குடி, மற்றும் இனவழி மக்கள், இரண்டு ஐரோப்பியர்கள், பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஒருவர், சார்தீனிய நாட்டைச்சேர்ந்த ஒருவர், பாப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த ஒருவர், சைனாவிலிருந்து இருவர் - வடக்குப் பிரதேச பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் தெற்குப் பிரதேசபழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஒருவர். இவர்களைத் தவிர பிரேசில் நாட்டு அமேஸான் காட்டுப்பகுதியில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் அடக்கம்.

மனிதக் குரங்குடன் ஒப்பிடும்போது டேனிசொவன்ஸ் இன மக்கள் இன்றைய மக்களிடமிருந்து மிக சொற்ப அளவிலேயே மரபணுக் குறியீடுகளில் மாறுபடுகிறார்கள். டேனிசொவன்ஸ் கற்காலத்திலேயே இறந்து விட்டதால் மனிதக் குரங்குகள் போல மனிதர்களிடத்தில் அதிகப் படியான மரபணு மாற்றங்களை உண்டு பண்ண முடியவில்லை என்ற உண்மையை இந்த சமானமின்மை காட்டுகிறது. விஞ்ஞானிகள் இந்த வித்தியாசத்தை வைத்துக் கொண்டு டேனிசொவன் விரல் எலும்பின் வயது 74,000 வருடங்களிலிருந்து 82,000 வருடங்கள் இருக்கலாம் – அதாவது முந்தைய தரவுகள் காட்டும் கணக்கை விட பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழமையானவை. 

லீயப்ஜிக் குழுவின் டிஎன்ஏ வை ஆராயும் முறையால் டேனிசொவன்ஸ் தாய் தந்தையரிடமிருந்து வந்துள்ள மரபணுக்களில் மிகவும் சிறிய எண்ணிக்கையிலேயே வித்தியாசங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அவதானிப்பின் காரணமாக பண்டை சைபீரியர்களிடம் மிக குறைந்த அளவிலேயே மரபணு ஒத்தியையாமை இருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மிகச்சிறிய அளவிலான டேனிசொவன் ஜனத்தொகை புது எல்லைகளுக்கு சென்றிருக்க வேண்டும்; அங்கு ஹோமொசெபியன்களுடன் சேர்ந்து கலப்பினங்களை உருவாக்கி இருக்க வேண்டும்; ஆனால் வாழ்வைக் கூட்டும் மரபணு மாற்றங்களைச் சேகரிக்க இயலாமல் போயிருக்கக்கூடும்.
டேனிசொவன் தனி நபரால் எடுத்துச்செல்லப்பட்ட ஒரே மாதிரியான மரபணு மாற்றங்கள் இன்றைய வாழும் மக்களிடம் கருத்த தோல், பழுப்பு நிற முடி, பழுப்பு நிற கண்களாக காணக் கிடைக்கிறது. 

பாப்புவா மக்கள் டேனிசொவன்ஸ் – களிடமிருந்து 6% மரபுரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். பாலியல் தொடர்பான எக்ஸ் குரோமோசோம் தவிர மற்றைய குரோமோசோம் மரபணுக்களை டேனிசொவன்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் இரண்டு எக்ஸ் குரோமோசோம்களையும், ஆண்கள் ஒரு எக்ஸ், ஒரு ஒய் குரோமோசோம்களையும் மரபுரிமையாகப் பெற்றிருக்கிறார்கள்.

முதன்முதலில் டேனிசொவன் ஆண்கள் பண்டைய பாபுவன் பெண்களுடன் புணர்ந்திருக்க வேண்டும். இதன் காரணமாக இப்போதைய பாபுவன் எக்ஸ் குரோமோசோம்களில் டேநிசொவன்களின் மரபுக் குறியீடுகள் மிகச்சிறிய அளவில் மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். அல்லது டேனிசொவன்களுக்கும் அவர்கள் கலப்பினம் செய்த நாகரீக மனிதர்களுக்கும் இடையே இருந்த மரபியல் ஒவ்வாமையினால் பிற்கால பாபுவன் தலைமுறைகளில் டேனிசொவன் மரபணுக்கள், குறிப்பாக எக்ஸ் குரோமோசோம்களில் இல்லாமல் போயிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

தற்போது வாழும் சீனர்களிடையே நியாண்டர்தால் மக்களின் பங்களிப்பு இருக்கிறது; தற்கால சீனர்களின் வம்சாவளியினர் பண்டைய சைபீரியன் மூதாதையர்களான டேனிசொவன்களிடமிருந்து வந்திருக்கக்கூடும் என்றாலும் தற்கால சீனர்களிடையே டேநிசொவன்களின் பங்களிப்பு இல்லை என்று பெபோ கூறுகிறார்.

இந்தப் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாறாக, தெற்குப்பகுதி சீனர்களிடையே தோராயமாக ஓரு சதவிகிதம் டேனிசொவன் வம்சாவளியின் பங்களிப்பு இருக்கிறது என்று ஸ்வீடன் நாட்டு உப்பசலா பல்கலைக்கழக பரிணாம மரபியல் வல்லுனர் திரு போன்டஸ் ச்கொக்லுண்ட் (Pontus Skoglund) மற்றும் திரு மட்டியாஸ் ஜாகோஸன் கூறுகிறார்கள். இவர்கள் இருவரும் நியாண்டர்தால் மற்றும் முற்றும் முழுமை பெறாத டேனிசொவன் டி என் எ க்களை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் மரபியல் அறிவுறுத்தல்களோடு ஒப்பிட்டு இருக்கிறார்கள். 

மேயர், பெபோ இருவரும் இரண்டே இரண்டு சீனர்களின் டி என் ஏ க்களை மட்டுமே ஆராய்ந்து இருக்கிறார்கள். இதனால் நியாண்டர்தால் மற்றும் டேனிசொவன் களின் மரபியல் பங்களிப்பை புள்ளிவிவரப்படி பிரித்தறிவது ஒரு எல்லைக்குட்பட்டதாகி விட்டது. 

“கிழக்காசியர்களின் ஜனத்தொகை தரவு மற்றும் மிக உயர்ந்த பண்புள்ள நியாண்டர்தால் மரபணுத் தொகுதிகள் கிடைக்கும் வரை தீர்ப்பு சொல்வது இயலாது” என்று ஜாகோஸன் கூறுகிறார்.

மேற்கோள்கள்

M. Meyer et al. A high-coverage genome sequence from an archaic Denisovan individual. Science. Published online August 30, 2012. doi:10.1126/science.1224344. செல்க

seperator