முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
தரவுத்தாள்கள் 
தொடர்புக்கு
Advertisements:

i
இஸ்ரோவின் நூறாவது விண்வெளித் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது

- (விக்கி செய்தியில் இருந்து)

ஞாயிறு, செப்டம்பர் 9, 2012

ISRO’s 100th space mission PSLV -C21 lifting off from the Satish Dhawan Space Research Centre at Sriharikota in Andhara Pradesh. Photo: K.V. Srinivasanஇஸ்ரோ எனப்படும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் 100 வது விண்வெளித் திட்டமான பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. (படம்:தி இந்து நாளிதழ்)

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முதல் விண்வெளித் திட்டம் ஆர்யபட்டா ஏவுதலுடன் 1975 ஆம் ஆண்டு தொடங்கியது. இன்றைய வெற்றிகரமான ஏவுதல் மூலம் 100 விண்வெளித் திட்டங்களை முடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

வெள்ளியன்று தொடங்கிய 51 மணிநேர கணக்கீட்டுடன் முடிவில் பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் இந்திய நேரப்படி இன்று காலை 9.53 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவின் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவூர்தியில் பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-6 மற்றும் ஜப்பானின் புரோயிடர்ஸ் ஆகிய இரு செயற்கைக்கோள்கள விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்நிகழ்வை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேரில் பார்வையிட்டார். இந்திய விண்வெளித் துறையையும், இந்திய விண்வெளி நிறுவனத்தின் அனைத்து நபர்களையும் வாழ்த்துவதாக இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் புதன் கோளின் சூழ்நிலையை ஆராய "மங்கல்யான்" எனப்படும் ஆளில்லா விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது.


நன்றி:விக்கி செய்திகள்