இந்தியாவின் செவ்வாய் பயணம் நவம்பர் 2013 இல் தொடங்குகிறது

இராசு குமார் 

செவ்வாய் கிழமை , புரட்டாசி 02, 2043 16:14 இதிநே
Tuesday, September 18, 2012 16:14 IST

செவ்வாய் கோளுக்கு செயற்கைக் கோளை அனுப்பி அந்த சிவப்பு கோளில் வளிமண்டலம் மற்றும் வாழ்க்கை நீடித்திருக்கும் உறுப்புகள் தேடல் ஆராய்ச்சிப்பணி நவம்பர் 2013 இல் தொடங்க இந்தியா ஒப்புதல் தந்துள்ளதாக ஒரு உயர்ந்த இடத்து அதிகாரி திங்களன்று தாமதமாகக் கூறினார்.

"நாங்கள் சிவப்புக் கோளிற்கு அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையானது பூமிக்கு அருகில் வரும் போது நமது விண்கலத்தை ஏவுவதாய் இந்த செவ்வாய்ப் பணியை நவம்பர் 27, 2013 நடத்த திட்டமிட்டுள்ளோம்", என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

ரூ 470 கோடி செவ்வாய் பயணம் பூமியில் இருந்து ஒரு விண்கலத்தை 55 மில்லியன் கிமீ தொலைவிற்கு திறனையும் 500 கி.மீ. தொலைவில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து வாழ்க்கை நீடித்திருக்கும் உறுப்புகளையும் தேடக்கூடியதுமாய் அமைந்துள்ளது.

இந்திய விண்வெளி குழுமம் சென்னைக்கு வடகிழக்கில் 80 கிமீ தொலைவில் உள்ள சிரீகரிகோட்டா விண்வெளித்தளத்தில் இருந்து சிவப்பு கிரத்தில் பல்வேறு அம்சங்களை ஆராயும் 1.4-டன் எடையுள்ள செவ்வாய் விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்காக ஒன்பது கருவிகள் கொண்ட உயர் இறுதி ஏவுகணையை (பியெசெல்வி-எக்சல்லு) பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
seperator