செவ்வாய் கோளில் நிலைத்திருப்பது எளிதாகிறதா? - புதிய கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
ஆக. 26, 2017 சனி பிற்பகல் 12:42

பல ஆண்டுகளாக செவ்வாய் கோளை விண்வெளியாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2020 ஆம் ஆண்டு மனிதர்களை செவ்வாய் கோளில் குடியமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

படம்: பிக்சா பே

செவ்வாய் கோள் காற்றுவெளியில் மனிதர்கள் அங்கு நிலைத்திருக்க அனைத்து 
வசதிகளையும் செய்வதும், அதற்கு தேவையான அனைத்து விதமான ஆய்வுகளும் முன்கூட்டி
யே செய்வது அவசியமாகிறது. (கோப்புப் படம்: பிக்சா பே)

இங்கிருந்து செவ்வாய்க்கு செல்லும் செயற்கைக்கோலில் மிகவும் குறைவான அளவே பொருட்கள் ஏற்றிச் செல்ல இயலும் ஆதலால், அதுவே மனிதர்கள் செவ்வாய் கோளில் நில விரிவாக்கம் செய்ய சிக்கலாக அமைகிறது. இந்நிலையில் நாசாவின் ஆய்வுக்குழு ஒன்றை தலைமை தாங்கும் மார்க் பிளன்னர் அண்மையில் மனிதர்கள் செவ்வாய் கோளில் நிலைத்திருக்க பயன் தரக்கூடிய ஒரு நெகிழிகளை தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளதாக அறிவித்தார்.

கலைச்சொல் குறிப்பு

கோள்    -    planet
கோல்    -    satellite
காற்றுவெளி   -    atmosphere
பல்லுறுப்பி - polymer
நொதி - yeast
கொழுப்பு அமிலம் - fatty acid
யாரோவியா லிப்பாலிட்டிக்கா - Yarrowia lipolytica
மார்க் பிளன்னர் - Mark Blenner
நாசா    -    NASA
ஒரு வகை நொதியானது மனிதரின் சிறுநீரில் உள்ள பல மதிப்புடைய உயிரியல் கூறுகளை உட்கொள்கிறது. அதனை பொறியாக்கம் செய்தால் பாலியெஸ்டர் பல்லுறுப்பியாகவோ அல்லது ஒமேகா-3 கொழுப்பு அமிலமாகவோ உருவாக்கமுடிகிறது என கண்டறிந்துள்ளார்.

யாரோவியா லிப்பாலிட்டிக்கா என்னும் இந்த நொதியின் உதவியால் அறிஞர்கள் பாலியெஸ்டர் பல்லுறுப்பியை அச்சு தொழினுட்பம் கொண்டு 3டி கருவிகள் தயார்க்கலாம் எனவும், ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தைக் கொண்டு உணவூட்டம் சார்ந்து பயன்படுத்தலாம் எனவும் கூறினர். 

மனிதர்களின் சிறுநீரைக் கொண்டு பல பயனுள்ள பொருட்கள் தயாரிக்கமுடிகிறதால் செவ்வாய் கோளில் மனிதர்கள் வாழ்வு எளிதாகும் என கூறப்படுகிறது.