சந்திரா கண்காணிப்பகம் கண்டறிந்த தோற்றப்பாடு

இராஜ்குமார்
Tue Oct 28 2014 13:59:35 GMT+0300 (EAT)

நாசாவின் சந்திரா கண்காணிப்பகத்தில் (Chandra Observatory), விண்மீன்கள் உருவாக்கத் தேவையான குளிர்ச்சியை அனுமதிக்கும் வகையில் தொகுப்பு விண்மீன் திரள்களின் (cluster galaxies) உள்ளே வெப்பநிலையைச் சூடாக வைத்துக் கொள்ள 'கொந்தளிப்பு' வழிவகுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. 


நீண்டக் கால மர்மமான விண்மீன் பிறப்பு மற்றும் அவை இல்லாமல் இருப்பதற்கான காரணம் சமதளத்தில் வானூர்தி ஓட ஏற்படுத்தப்படும் கொந்தளிப்பு என்னும் அதே தோற்றப்பாடு எனஅந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு ஸ்டாண்ட்போர்டு பல்கலையில் பணியாற்றும் இரீனா ஜுரவ்லேவாத் தலைமை தாங்கிய ஆய்வுக்குழுவால் நடத்தப்பட்டது.