பெருங்கடல் சுழற்சியும், வெப்பநிலை மாற்றமும்

இராஜ்குமார்
Mon Oct 27 2014 21:06:39 GMT+0300 (EAT)

பூமியின் வெப்பநிலை மாற்றத்திற்குப் பெருங்கடலின் சுழற்சியே காரணம் என ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. சயன்சு ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுமுடிவு சிறப்பு வாய்ந்ததாகக் கருதபடுகிறது.


பெருங்கடலின் சுழற்சியின் காரணமாகவே 2.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் அதிகக் குளிர்ச்சி ஏற்பட்டது என்றும், வட துருவத்தில் பனிக்கட்டி உருவாக்கம் ஏற்பட்டதுஎன்றும் அவ்வாய்வு விவரிக்கிறது. ஆகையாலே, வெப்பமும், கார்பண்டையாக்சைடும் அட்லாண்டிக் பகுதிக்குத் தள்ளப்பட்டது. வடக்கில் இருந்து தெற்கில் உள்ள பசிபிற்கு வரை கீழேஆழ்பெருங்கடலைத் தள்ளியது. 


2.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் கார்பண்டையாக்சைடு பெருமளவிற்கு மாற்றமடையாதலால் அப்போது அதிகப் பனி பிரதேசம் வட துருவத்தில் ஏற்பட்டது. ஆனால், கடந்த200 ஆண்டுகளாக அதிக அளவில் கார்பண்டையாக்சைடு பூமியில் வெளியிட்டிருப்பதால், வட துருவத்தில் பனி உருகி பெருமளவில் பூமியில் காலநிலை மாற்றம் ஏற்படும் என ஆய்வுகூறுகிறது.