தெற்கத்தியப் பறவைகள் உங்களது வீட்டின் குளிர் காலப் புழக்கடைக்கு வரலாம்

புதிய அறிவியல் குழு
Mon Oct 27 2014 19:49:57 GMT+0300 (EAT)

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நன்கு பார்த்துக் கொள்வதற்காக, உங்களது சொந்தப் புழக்கடையைத் தவிர வேறெதையும் பார்க்க வேண்டியதில்லை. பறவைத் தீனியளிப்பவரைச் சூழ்ந்து தாவித் திரிகின்றனவான நீங்கள் வழக்கமாகக் காணும் பறவைகளுக்கு மத்தியில், குளிர் காலத்தின் இதமான வெப்பநிலையால் வடக்கு நோக்கி ஈர்க்கப்பட்ட எதிர்பாராத சில பறவைகளும் அங்கே காணப்படலாம். இளஞ்சூட்டுக்குப் பழகிக் கொண்ட இனங்கள் – பொதுவாகத் தென் மாநிலங்களிற் காணப்படும் கர்தினால் பறவைகள், கரோலினா விரென்கள் போன்ற இதமான குளிர் காலத்தை விரும்பும் பறவைகள் – தாம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் செய்ததை விட மேலும் தொலைவான வடக்கில் குளிர் காலத்தைக் கழிக்கின்றன. 


புவி வெப்பமாதலின் ஆகச் சிறந்த சுவடுகளில் ஒன்று யாதெனில் உலகின் விலங்கினங்கள் துருவப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்வதாகும். ஆயினும் சில ஆய்வுகள் ஒரே தடவையில் தனியொரு இனத்தை விட அதிகமானவற்றை நோக்கியுள்ளன. 

------முழுக்கட்டுரை புதிய அறிவியல் நவம்பர் 2014 மின்னிதழில் வெளிவரும்------