நோவாவில் இருந்து வெளியேறிய தீப்பந்து

இராஜ்குமார்
Mon Oct 27 2014 16:37:40 GMT+0300 (EAT)

கடந்த ஆண்டு தெல்பினசு விண்மீன் குழுவில் (Delphinus constellation) காரா அரே அகசிவப்பு தொலைநோக்கியால் (Chara Array infrared telescope) கண்டறியப்பட்ட நோவா விண்மீனில் இருந்து தற்போது வெளியாகிய வெப்பக்கருத் தீப்பந்தை வானியலாளர்கள் படம் பிடித்துள்ளனர். 


சிட்னி பல்கலை மற்றும் அசுத்திரேலிய தேசிய பல்கலை பொன்றவற்றை சேர்ந்த 17 ஆய்வாளர்கள் இந்தத் தகவலை மேலும் ஆய்வு செய்தனர். கடந்த ஆகத்து 2013இல் 15000 ஒளி ஆண்டு தொலைவில் இருந்த நோவா தற்போது 14800 ஒளி ஆண்டு தொலைவில் நெருங்கிவந்துள்ளது. 

நோவாவில் இருந்து வெளியேறிய தீப்பந்து நொடிக்கு 600 கி.மீ வேகத்தில் 20-சுழற்சியுடன் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.