சனிக் கோளின் நிலவு வளி மண்டலத்தில் சாண வாயு

இராஜ்குமார்
Sun Oct 26 2014 23:45:00 GMT+0300 (EAT)

சனிக் கோளின் நிலவு டைட்டன். அந்த டைட்டனின் வளி மண்டலத்தில் எதிர்பாராத வண்ணம் மிகுதியாக சாண வாயு மேகங்கள் வீற்றிருக்கிறது என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 


மேரிலாந்தின் கிரீன்பெல்ட்டில் உள்ள காட்டார்டு ஸ்பேஸ் பிளைட் செண்டரில் பணியாற்றும் காரி ஆண்டர்சன் இவ்வாறு டைட்டனில் காணப்படும் சாண வாயு மேகங்கள் இந்த அளவில் மிகுந்திருக்கும் என இதற்கு முன் யாரும் கணித்ததில்லை என கூறினார். 

இது பூமியில் வெகுவாக விலகி காணப்படும் புற மேகங்களுக்கு ஒப்பானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.