மெகாலோடான் என்னும் பெரிய பெரும் சுறா

இராஜ்குமார்
Sun Oct 26 2014 23:18:28 GMT+0300 (EAT)

2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சுறா வாழ்ந்ததற்கான தொல்படிமங்கள் (fossils) கிடைக்கப்பெற்றுள்ளதாக கடலுயிர் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 


இந்த வகை கார்காரக்கல்சு மெகாலோடான் (Carcharocles megalodon) சுறா மீன் உலகில் மிக பெரிய சுறாவாக கருதுகின்றனர். சூரிச் பல்கலையைச் (University of Zurich) சேர்ந்த கிரிஷ்டோபர் கிளமண்ட்ஸ் மற்றும் பிளோரிடா இயற்கை வரலாற்று கண்காட்சி பல்கலையைச் (University of Florida’s Museum of Natural History) சேர்ந்த காட்டலினா பிமியாண்டோ ஆகியோர் நடத்திய தொல்லுயிர் படிமங்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இவை கடலில் திமிங்கலம் மற்றும் பிற பாலூட்டிகளை உண்டு வாழ்ந்த மிக உயர் அளவில் விளங்கும் ஒரு இரைவிழுங்கி (predator) என விஞ்ஞானிகள் இதனை விவரிக்கின்றனர். சுமார் 100 டன் எடையும் 20 மீ நீளமும் உள்ள மிக பெரிய தொல்மாதிரி படிவம் இடம்பெற்றுள்ளது. 

இது வாழ்ந்த காலத்தை திறனான் நேர் மதிப்புக்கூட்டு (Optimal Linear Estimation) என்னும் கணித மாதிரி மூலம் கணித்துள்ளனர்.