"எபோலா தீநுண்மம் 23 மில்லியன் ஆண்டுகள் பழையானது!"

இராஜ்குமார்
Sun Oct 26 2014 21:42:56 GMT+0300 (EAT)

எபோலாத் தீநுண்மத்தின் பரிணாம வேர்த் தொடங்கிய காலம் சுமார் 16 முதல் 23 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கும் என ஒரு புதிய ஆய்வு பரிந்துரைக்கிறது. இந்த ஆய்வு எபோலா மற்றும் மார்பர்க்கு (Marburg) என்னும் தொடர்புடைய குடும்பமான இழைத் தீநுண்மங்கள் (filo viruses) நாம் முன்பு எண்ணியதைவிட மிகவும் பழமையானது எனக் கூறியுள்ளது. இந்த இழைத் தீநுண்மங்கள் மையோசீன் எபோச்சு (Miocene Epoch) காலத்தில் இருந்துள்ளது. 


அக்காலத்திலேயே எபோலா மற்றும் மார்பர்க்கு என்று வளரக்கூடிய இதன் பரிணாம வளர்ச்சி முறிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவை பல மில்லியன் நூற்றாண்டுகளாகப் பாலூட்டிகளுடன் தொடர்புடையதாக விளங்குவதாகத் தெரேக் டைலர் என்னும் பேராசிரியர் கூறினார். 

எபோலா மற்றும் மார்பர்க்கு ஆகியவையின் பொதுவான பரிணாமத்தைப் புரிந்துகொள்வதைப் பொறுத்தே எதிர்வரும் நோயாக்கி உயிரினங்களுக்கும் சேர்த்தே நாம் மருந்துகளை உருவாக்கமுடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.