புற்று நோயைக் கொல்லும் தண்டு உயிர்மிகளை பொறியியலாக்கம்!

இராஜ்குமார்
Sat Oct 25 2014 21:29:00 GMT+0300 (EAT)

கார்டுவேர்டு பல்கலை ஆய்வாளர்கள் மூளை புற்று நோயை தண்டு உயிர்மிகள் (stem cells) மூலம் குணமாக்கும் புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். எலியின் மீது மரபணு திருத்திய தண்டு உயிர்மிகள் பயன்படுத்திய போது அது நலமான உயிர்மிகளை கடந்து சென்று புற்றுநோய் கொல்லும் நச்சை வெளியிட்டு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்தது. 


முக்கியமாக மாற்றப்பட்ட உயிர்மி புற்றுநோய் எதிர்ப்பு நச்சை வெளியிடும் போது அந்த நச்சுக்கு தானே பாதிப்படையாமல் இருக்கிறது. இது புற்றுநோய் குணமாக்குதலில் முக்கியமானதாக விளங்குகிறது. இதைப் பற்றிய ஆய்வறிக்கை ஸ்டெம் செல்ஸ் என்னும் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.