புரத நார்கள் நுண்வடிவில் பொறியாக்கம்

இராஜ்குமார்
Sat Oct 25 2014 18:41:52 GMT+0300 (EAT)

நோய் நீக்கும் சேர்மமாகமோ (theropautic compound) அல்லது பிற பொருளாகவோ இருந்தாலும் ஒரு சிறிய மூலக்கூறை (molecule) ஈன்றளிக்க முடியும்படியான முதல் புரத நுண்நாரை (protein microfibre) ஆய்வாளர்கள் பொறியாக்கம் செய்துள்ளனர். நியூயார்க் யுனிவர்சிட்டி பாலிடெக்னிக் ஸ்கூல் ஆஃப் இஞ்சினியரிங்கைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிறப்புவாய்ந்த நார்களை உண்டாக்கும் புரத வளர்ப்பில் ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளனர். 

ஆய்வாளர்கள் தற்பூட்டிலிருந்து (self-assembling) நார்களாக மாறக்கூடிய புதிய புரதங்களை உருவாக்க முடியும் என அறிந்தது முதலே, இதனை நூணிய வடிவில் (nanoscale) செயலாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது இது முதல் முறையாக நுண்வடிவில் புரத நார்களை பொறியாக்கப் பெற்றுள்ளது.