யுரேனஸ் கோள் போன்ற ஒரு புதிய கோள் கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
Sat Oct 25 2014 15:54:50 GMT+0300 (EAT)

ஒரு புதிய கோள் சுமார் 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இக்கோள் யுரேனஸ் கோளைப் போன்று தோற்றமளிக்கிறது என அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழக விண்வெளித் துறை ஆராய்ச்சியாளர் ரோடெக் பெலிஸ்கி என்பவர் தலைமையிலான குழு கூறியுள்ளது. 


யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களுக்கு அருகே இக்கோள் தென்படுவதாகவும், இதன் சுற்றுவட்டப் பாதை யுரேனஸ் கோள் போன்று அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளனர். நைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் அதிகமாக உள்ளடக்கிய யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்கள் எவ்வாறு ஊதா நிறத்தில் காணப்படுகிறதோ அவ்வாறு இந்த புதிய யுரேனஸ் கோளும் ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது. 

எனினும், அதன் உட்புறத்தில் எந்த வகையான காற்று மண்டலம் உள்ளடக்கியுள்ளது என்பது தெரிவிக்கபடவில்லை.