உலகில் முதலில் உடலுறவு கொண்ட உயிரினம் கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
Sat Oct 25 2014 15:17:08 GMT+0300 (EAT)

உலகம் தொடங்கி உயிர்களின் தற்கால இனப்பெருக்க முறை உடலுறவு கொண்டு உயிர்களை ஈன்றெடுத்தல் ஆகும். அவ்வாறு இனப்பெருக்கம் செய்த முதல் உயிரினம் எது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

சுமார் 38 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த ''மைக்ரோபிரக்கியஸ் டிக்கி'' என்னும் ஒரு மீன்வகையே இவ்வாறு உடலுறவு கொண்டு இனப்பெருக்கம் செய்யும் முதல் உயிரினம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 


இவ்வுயிரினத்தின் ஆண் மீன்களுக்கு "L" வடிவில் ஒரு பிற்சேர்க்கை காணப்படுவதாகவும், அப்பிற்சேர்க்கை பெண் மீன்களின் பிற்பகுதியில் உள்ள எழுப்பில் இணைந்து கொள்ளும் உடலுறவு முறையை பின்பற்றியது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

ஆனால், இம்மீன்கள் பிறகு இப்பழக்கத்தை மாற்றிக் கொண்டு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பழக்கத்திற்கு மாறிவிட்டது என கூறுகின்றனர். அதன் பிறகு சிறா போன்ற மீன்வகைகள் 50 லட்சம் ஆண்டுகளுக்கு பின்னர் உடலுறவு முறையை பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.