ரொசெட்டாவின் வால்மீன் உயிர்கள் வாழ்வதற்கு தகுதியானது

இராஜ்குமார்
Fri Oct 24 2014 21:23:03 GMT+0300 (EAT)

ரொசெட்டாவின் வால்மீனை படம்பிடித்த விண்கலம் ஒன்று அந்த வால்மீன் உயிர்கள் வாழ்வதற்கு தகுதியானது என கண்டறிந்துள்ளது. 

கடந்த செப் 10 அன்று எடுக்கப்பட்ட ரொசெட்டா வால்மீனின் கழுத்துப் பகுதியை மிக அருகில் படம்பிடித்தது. அப்படத்தை எடுத்த விண்கலத்தில் பொருத்தப்பட்ட மற்றொரு கருவி அந்த வால்மீனில் பரவியிருக்கும் வாயுக்களை கண்டுணர்ந்துள்ளது. 


அழுகிய முட்டையைப் போன்று வீசும் ஐதரசன் சல்ஃபைடு, அமோனியா, பாதாம் போன்று வீசும் ஐதரசன் சையனைடு போன்ற மூலப்பொருட்கள் அந்த வால்மீனில் உள்ளதாக கண்டறிந்துள்ளது. இம்மூலப்பொருட்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதென்பதால் இந்த வால்மீன் சிறப்பு வாய்ந்ததாகிறது.