நற்பயன் தரும் சீதசன்னி தடுப்பூசி

இராஜ்குமார்
Wed Oct 15 2014 16:44:32 GMT+0300 (EAT)

சீதசன்னிக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி எதிர்பார்த்ததை விட நன்கு பயன்தருவதாக தாம்சைக் என்னும் புறப்பரவியலாளர் அக். 9 அன்று அமெரிக்க பரவும் நோய்கள் அமைப்பின் ஒரு ஆண்டு கலந்தாய்வில் அறிவித்தார்.  இந்த தடுப்பூசியின் பெயர் 13-வாலன்ட் நிமோனிகாக்கல் காஞ்சுக்கேட் தடுப்பூசி ஆகும். இது 13 உட்பிரிவு ஸ்டெரெப்டோக்காக்கஷ் நிமோனியாக்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதால் இப்பெயர் பெற்றது. இது சீதசன்னிக்கு மட்டுமல்லாமல் எதர்யுயிர்மிக்கு தாங்கும் பாக்டீரியாவையும் தடுக்கும் வல்லமையை கொண்டதாக விளங்குகிறது.