புதிதாக கண்டறியப்பட்ட பழங்கால கிரேக்க தரைதட்டிய கப்பல் உலகின் பெரிதென தெரிகிறது

இராஜ்குமார்
Wed Oct 15 2014 00:51:14 GMT+0300 (EAT)

2100 ஆண்டுகளுக்கு முன் தரைத்தட்டி மூழ்கிய கப்பலின் கலன் மற்றும் அதன் பகட்டு சரக்கு ஆகியவற்றை அகழாய்வாளர்களும் கடல்மூழ்கிகளும் கண்டறிந்துள்ளனர். இது 50மீ நீளம் கொண்ட ஒரு கிரேக்க கப்பலின் கலன் ஆகும். 

கிரேக்கத் தீவு ஆண்டிகைத்திரா என்னும் 55மீ அகழாய்வுத் தளத்தில் ஒரு மேசை அணி, ஒரு பீங்கான் நீர்க்கலன், ஒரு வெண்கல ஈட்டி, ஒரு பாய்மர மோதிரம், ஒரு காரீய நங்கூரம் மற்றும் 11-செ.மீ அடர்ந்த வெளிச்சுவர் பலகை போன்றவைகளை வுட்ஸ் ஹோல் ஓசனோகிராஃபிக் நிறுவனம் அக். 9 அன்று அறிவித்துள்ளது.