உருசியா வெற்றிகரமாக அணுஆயுத ஏவுகணையை சோதித்தது

விக்கிசெய்தி
Mon Oct 13 2014 23:27:28 GMT+0300 (EAT)

உருசியா வெற்றிகரமாக தனது கண்டம் விட்டு கண்டம் செல்லும் நீண்ட தூர அணுஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது என உருசியாவின் கடற்படை தளபதி கூறினார். இச்சோதனை போரெ வகை நீர்மூழ்கி கப்பலில் இருந்து நடத்தப்பட்டது. அக்டோபரிலும் நவம்பரிலும் மேலும் இரு சோதனைகள் நடத்தப்படும் என்றார். இவ்வேவுகணையின் பெயர் பலவா ஆகும். இது 12 மீட்டர் உயரம் உடையதும் 36.8 கிலோடன் எடை உடையதும் ஆகும். உருசியப்படைகள் கிழக்கு உக்ரைனில் கலகம் வெடித்ததிலிருந்து பல பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. இவ்வேவுகணை 8,000 கிமீ தொலைவு செல்லக்கூடியதும், 6 லிருந்து 10 அணுஆயுதங்களை தாங்கிச்செல்லக்கூடியதும் ஆகும். உருசிய கடற்படையின் அட்மிரல் விக்டர் வெள்ளை கடலில் இவ்வேவுகணையின் சோதனை நிகழ்ந்ததாகவும் அது உருசியாவின் தூரக் கிழக்கிலுள்ள குரா சோதனைக் களத்திலுள்ள குறியை சரியாக தாக்கியதாகவும் தெரிவித்தார். அக்டோபரிலும் நவம்பரிலும் நடைபெறும் சோதனைகளில் கடற்படையின் ஏவுகணைக் கப்பல் மூலம் இது சோதிக்கப்படும் என்றார். வருங்காலத்தில் இதுவே உருசியப் படைகளின் முக்கிய ஏவுகணையாக இருக்கும். இதன் ஆரம்ப கால சோதனைகள் தோல்வியில் முடிந்தது, இத்திட்டத்திற்குப் பின்னடைவாக கருதப்படுகிறது. புதன்கிழமை நடந்த சோதனை இவ்வேவுகணையின் 19ஆவது சோதனையாகும்.