காஃகின் கதிரலையை காட்டும் மாதிரி கருந்துளை

இராஜ்குமார்
Sun Oct 12 2014 22:13:23 GMT+0300 (EAT)

ஆய்வாளர்கள் உருவாக்கிய ஆய்வக தயாரிப்பு கருந்துளைகள் (black holes) துளிம துகள்களை (quantum particle) உமிழ்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால், அந்த கருந்துளைகள் உமிழும் துளிம துகள்கள் 1974ல் காம்பிரிட்ஜ் பல்கலையில் பணியாற்றிய ஸ்டீவன் காஃகின் எழுத்துப்பூர்வமாக நிறுவின கதிரலையை ஒத்ததாக இருக்கிறது. இதனால், இந்தப் பணி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.