மனிதர்கள் மூளைக்காக தசைநார் வளர்ச்சியைக் குன்றச்செய்கின்றனர்

Sun Jun 01 2014 21:57:21 GMT+0300 (EAT)

மனிதர்களுக்கு முன்பு படைக்கப்பட்ட பல பாலூட்டிகளைக் காட்டிலும் மனிதர்களின் மூளை மிகவும் சிக்கலான ஒன்றாகும். அச்சிக்கலுக்கு பின் ஒளிந்துள்ள ஒரு இரகசியத்தை சீனாவில் உள்ள அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

[படம்:விக்கிப்பீடியா]

சாங்காயில் உள்ள சைனீஸ் அகாடமி ஆப் சயன்சசின் கீ லெபாரெட்டரி ஆப் கம்பியூட்டேசனல் பையாலஜியின் ஆய்வுப்படிப்பு ஒன்று மனிதர்களின் மூளைகள் பிற பரிணாமம் ஒத்த பாலூட்டிகளைக் காட்டிலும் சிக்கலாக இருப்பதற்கு காரணம் மனிதர்கள் தனது தசைநார் வளர்ச்சியைக் குன்றச்செய்து கொள்கிறது என்று கூறுகிறது. 

ஏனென்றால், மனித உடலின் மொத்த ஆற்றலில் 20 விழுக்காடு அதன் மூளையே எடுத்துக்கொள்கிறது. இதனால் மனித உடலின் சதை வளர்ச்சி பிற உயிரினங்களைக் காட்டிலும் சற்று குறைவாகவே உள்ளது. இதைப் பற்றிய ஆய்வினை பிளாஸ் என்னும் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.