விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் புதிய இரக விண்ணோடம் கண்டுபிடிப்பு

Sat May 31 2014 16:13:34 GMT+0300 (EAT)

ஏற்கனவே மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் விண்ணோடத்தினை விண்வெளி வீரர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது அதன் நவீன வடிமான ட்ராகன் வி-2 விண்ணோடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இதனைக் கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸ் என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த விண்ணோடம் தரையிறங்க எந்த ஒரு தனி ஓடுபாதையும் தேவைப்படுவதில்லை. இது தரையிறங்குவதற்கென தனி உந்துக்கருவிகளும், பக்கவாட்டில் கால்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விண்ணோடம் விண்வெளிவீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று சேர்த்தப்பின் பூமிக்கு திரும்பி வரக் கூடியதாக வடிவமைத்துள்ளனர். மீளப் பயன்படுத்தக் கூடியதாகும்.