தீ ஆபத்துக்களைத் தாங்கும் வண்ணம் மின்கலங்கள் கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
Fri May 23 2014 18:11:39 GMT+0300 (EAT)

சப்பானில் தோகோக்கு பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு ஒன்று இலித்தியம் அயனி மின்கடத்திகளில் உள்ள இலித்திய உப்பிற்கு பதிலாக பாறை உப்புக்களைச் சேர்த்து திடநிலை மின்கலங்களைத் தயாரித்துள்ளனர். இதனால் இந்த மின்கலங்களுக்கு தீ எதிர்ப்பு திறன் கூடுகின்றது. 

இதற்கு முன்பே இந்த வகை பாறை உப்பு இலித்தியம் போரோகைரைடு, கரிம வேதியியல் கூடங்களில் நன்கு அறியப்பட்ட ஒன்றாகவே இருந்தது. ஆயினும் இதனை கையாள அதிக வெப்பநிலை தேவைப்பட்டதாக இருந்து வந்தது. ஆனால் தற்போது KI மூலக்கூறுகளுடன் இந்த இலித்தியம் போரோகைரைடினை சேர்த்ததின் மூலம் அறை வெப்பநிலையிலேயே கையாளக்கூடிய ஒரு மின்கலனை கண்டறிந்துள்ளனர்.