4000 ஆபத்தான ஆமைக் குஞ்சுகள் தென் இந்தியாவில் பொரிந்துள்ளது

இராஜ்குமார்
Thu May 22 2014 22:15:47 GMT+0300 (EAT)

தமிழ் நாட்டில் உள்ள கோடியக்கரை அருகே சுமார் 4443 ஆபத்தான ஆலிவ் ரிடில்சு ஆமைக் குஞ்சுகளை ஆமைகள் பொரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கோடியக்கரை கடலருகே இக்குஞ்சுகள் பொரித்துள்ளது என பிரஸ் திரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் கடற்கரைப் பகுதியில் கரையோரம் இந்த ஆமைகள் முட்டைகளை இட்டுவிட்டு திரும்ப கடலுக்குள் சென்றுவிட்டது. பிறகு வனவிலங்கு துறையின் குஞ்சுப்பொரிப்பகம் இம்முட்டைகளை 6 கடற்கரைப் பகுதியில் கண்டெடுத்தனர். சுமார் 5098 முட்டைகளை கண்டெடுக்கப்பட்டது. அதில் 4443 முட்டைகள் குஞ்சுகள் பொரிக்கப்பட்டு அக்குஞ்சுகளை கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது.