தானே சரிசெய்யும் மின்தேக்கிகள் கண்டுபிடிப்பு

இன்பம்குமார்
Mon Nov 18 2013 22:07:52 GMT+0300 (EAT)

மின்னணு சாதனங்களில் பெரும் சிக்கல் என்னவென்றால் அது அதன் மின்தேக்கி பழுதடைவது ஆகும். ஒரு சில ஆண்டுகளில், மின்னணு சாதனங்களின் மின்தேக்கியானது அதன் மின் தேக்க திறனை இழந்துவிடுகிறது. இதனால் பெரும்பாலான பயனர்கள் இன்னல் படுகிறார்கள். 
Image courtesy of Stuart Miles at FreeDigitalPhotos.net

சுடான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வண்ணம் ஒரு புதிய வகை மின்தேக்கியைக் கண்டறிந்துள்ளனர். அதுவே, தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் இலித்தியம் அயனி மின்தேக்கி.

இந்தக் கண்டுபிடிப்பால் மின்சார தானுந்துகளின் ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கலாம் என உலகில் பல அறிஞர்கள் நம்புகின்றனர்.

பொதுவாக, மின்தேக்கிகளின் மின்வாயினில் நாட்கள் ஆக ஆக சிறு வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனாலேயே மின்தேக்கி பழுதடைந்து நீண்டநாட்களுக்கு நீடிக்காமல் போய்விடுகின்றன. சயன்சு டெய்லி என்னும் ஆய்விதழில் சுடான்போர்டு பல்கலைக்கழக அறிவியலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்த மின்தேக்கியின் மின்வாயினுடன் இழுப்புக்கொள்ளும் பல்லுறுப்பு நெகிழியைப் பூசியுள்ளதாக கூறுகின்றனர். இவ்வாறு செய்வதினால் மின்வாயி நாட்கள் ஆக ஆக வெடிப்புகள் ஏற்படா வண்ணம் பாதுகாக்கின்றன.

இதனால், இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றென பல அறிஞர்கள் போற்றுகின்றனர்.