நாசா செவ்வாய்க்கு ஏவும் மாவென் விண்கலம் இன்று தொடக்கம்

இராஜ்குமார்
Mon Nov 18 2013 17:32:34 GMT+0300 (EAT)

நாசா தயாரித்த மாவென் விண்கலம் இன்று மாலை யூடிசி நேரப்படி 6:28 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இன்னும் 16 நாட்களுக்குள் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படவில்லையெனில் பிறகு 2016 முற்பகுதியில் தான் ஏவ இயலும். 

 2450 கி.கி எடையுள்ள இந்த விண்கலம் 22 செப்டம்பர் 2014 இல் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடையும். 2.5 கூம்பு மீட்டர் வடிவமாக இதனை கட்டமைத்துள்ளனர். 

இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 671 மி.டா (மில்லியன் டாலர்) ஆகும். இது செவ்வாய் கிரகத்தின் காற்றுவெளியில் உள்ள வெப்பக் காற்றினையும், நெற்று மற்றும் மின்ம வாயுக்களையும் ஆய்வு செய்யும் நோக்குடன் நிறைவேற்றப்படுகிறது.