அண்டார்டிக்காவில் ஏற்படும் எரிமலை அதிர்வு செயல்பாடுகள்

இராஜ்குமார்
Sun Nov 17 2013 23:33:56 GMT+0300 (EAT)

தொலை மேற்கு அண்டார்டிக்காவில் உள்ள நடுக்கங்கள் பனிக்கட்டியின் அடியில் எரிமலை மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவது போன்ற அறிகுறியைக் காட்டுகிறது என ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. 

37 அதிர்வு நிலையங்களைப் பயன்படுத்திய அண்டார்டிக்காவில் ஏற்படும் ஆயிரக்கணக்கான அதிர்வு ஓசைகளைக் கண்டறிந்துள்ளனர் வாசிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியறிவியலாளர் செண்ட்.லூயிசு மற்றும் அவரது உடன் பணியாளர்கள் ஆகியோர். 

எரிமலை வெடிக்கும் நிகழ்வுகளால் ஏற்படும் வெப்பத்தினால் பனித்தகடுகள் வேகமாக மிதந்து ஓடுகின்றன என அவர்கள் கருதுகின்றனர். 

இந்நிகழ்வுகள் 25 மற்றும் 40 கி.மீ அதிர்வுநீளம் மற்றும் ஆழம் கொண்டதாக விளங்கின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுப் பற்றிய ஆய்வு அறிக்கை நேச்சர் ஆய்விதழில் நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டுள்ளது.