சூரியன் விசிறிய மின்னூட்ட கதிர் இழை

இராஜ்குமார்
Sun Nov 17 2013 19:49:20 GMT+0300 (EAT)

சூரியனின் மேற்பரப்பில் உள்ள வெப்ப வாயு, ஒரு பரந்தப் பிளவை ஏற்படுத்திக் கடந்த செப்டம்பர் 29-30ல், மின்னூட்டமுள்ள துகள்களால் ஆன விசுரும் இழையை மணிக்கு 3 மில்லியன் கி.மீ வேகத்தையும் மிஞ்சி சூரியனை விட்டு விளாசப்பட்டுள்ளது. இப்படத்தில் உள்ளப்படி இந்த நிகழ்வினால் இழை வெளியேறியப்பகுதியைக் காட்டுவதாக சூரியனின் மேற்பரப்பில் ஒரு வடு ஏற்பட்டுள்ளது. 

நாசாவின் சூரிய விசையியக்கவியல் கண்காணிப்பகம், இரண்டு வெவ்வேறு அலைநீளப் பார்வையினை ஒருங்கிணைத்து இந்தப் படத்தை பிடித்துள்ளனர். இப்படத்தில் உள்ள மஞ்சள் நிறம் சூரியனின் காந்த அலைகளின் வழியாக நகரும் மின்மக் கலவையைக் காட்டுகிறது. சிவப்பு மஞ்சள் நிறம், 50,000° செல்சியசில் உள்ள சூரியனின் மின்மக்கலவையைக் காட்டுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக கண்காணித்த போது, சூரியன் மிகவும் அமைதியாக இருந்தது. ஆனால், தற்போது விசித்திரமாக கதிர் இழைகளை வீசியுள்ளதால், சூரியனின் நிச்சயமற்ற செயல்பாட்டை கண்டு நாசாவின் அறிவியலாளர்கள் வியந்துள்ளனர்.

சூரியன் விசிறிய மின்காந்த இழை