தமிழ்நாட்டில் விண்வெளி ஏவுதளம் இருந்தால் இந்தியாவின் ஏவுதிறனை அதிகரிக்கலாம்

இராஜ்குமார்
Sun Nov 17 2013 13:06:49 GMT+0300 (EAT)

தமிழகத்தின் தென்மாவட்டமான கன்னியாகுமரி அல்லது திருனெல்வேலி ஆகிய பகுதியில் இந்தியாவின் விண்கல ஏவுதளம் அமைத்தால் அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை நம்மால் விண்ணில் செலுத்த முடியும் என கூறினார். முன்னாள் இசுரோ விஞ்ஞானி என்.சிவசுப்ரமணியன் செய்தியாளர்களிடம் இதுப் பற்றிய தகவல்களைக் கூறுகையில், இந்த நிலப்பகுதிகள் பூமியின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் தற்போதுள்ள 1.2 முதல் 1.5 டன் எடை ஏவுதிறனை 2 டன் ஏவுதிறன் வரையில் அதிகரித்துக்கொள்ள இயலும் என்றார்.