துளிம நினைவகங்கள் அறை வெப்பநிலையில் 39 நிமிடங்கள் வரை நீடிக்கின்றன!

இராஜ்குமார்
Sat Nov 16 2013 23:53:38 GMT+0300 (EAT)

உலகிலேயே முதல் முறையாக துளிம நினைவகங்கள் 39 நிமிடங்கள் நீடிதிருக்கும் ஆய்வை கண்டறிந்துள்ளனர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அறிஞர்கள். குறைக் கடத்திகளின் உள்ளிருக்கும் நெற்று அளிப்பான்களின் மின்னணு மற்றும் நெற்றுழை சுழல் துளிம பிட்டுகளை முன்னரே அறிஞர்கள் படித்தாலும் அவை குறைந்த வெப்பநிலையில் மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. அயனியூட்டப்பட்ட அளிப்பான்களின் நெற்றுழை சுழல்கள் அறை வெப்பநிலையில் கூட செயலாற்றக்கூடிய திறன் படைத்ததாக அமைந்துள்ளது. இது ஒரு புதிய தொழிநுட்பத்தைத் தொடங்க வழிவகுக்கக்கூடும்.

மேலும் படிக்க டிசம்பர் மாத இதழைப் படியுங்கள்