பூமிமீது செய்மதி விழலாம்

இராஜ்குமார்
Sun Nov 10 2013 20:55:22 GMT+0300 (EAT)

உலகைச் சுற்றியுள்ள பெருங்கடலின் சுழற்சியை ஆராய்ந்து வந்த கோசி என்னும் செய்மதி (விண்கலம்) அதன் எரி பொருள் தீர்ந்ததினால் பூமியை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று நள்ளிரவிற்கு பிறகு இந்த செய்மதி பூமியின் மீது வந்து விழலாம் என கணித்துள்ளனர் அறிஞர்கள். மேலும் இந்த செய்மதி மக்கள் தொகையில்லாத பகுதியிலேயே விழும் வாய்ப்புள்ளது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.