இசுரோவின் செ.சு.தி 4ம் வட்டப்பாதை உயர்வு வெற்றியடைந்துள்ளது!

இராஜ்குமார்
Sat Nov 09 2013 15:44:27 GMT+0300 (EAT)

இசுரோவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (செ.சு.தி) விண்ணில் ஏவியவுடன் 6 முறை பூமியை விஞ்சி கோள்பாதையை அதிகரிக்கும். முதல் மூன்று பாதை அளவு நீட்டிப்பை முடித்து நான்காம் பாதை நிட்டிப்பை நவம்பர் 8, 2013 இரவன்று நீட்டிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதன்படி, நான்காம் சுற்றுவட்டப்பாதையான 70000 கி.மீ வட்டப்பாதையை நேற்று இரவு வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இதற்காக சிறப்பான திரவ இயந்திரத்தை செ.சு.தி இயக்கியது.