தேடவும் மீட்கவும் கூடிய மனிதனற்ற வான்வெளி ஊர்தியில் முன்னேற்றம்

இராஜ்குமார்
Sun May 19 2013 10:52:16 GMT+0300 (EAT)

தேடவும் மீட்கவும் பயன்படுத்தப்படும் மனிதனற்ற வான்வெளி ஊர்தி (Unmanned aerial vehicle) அல்லது வலவனில்லா வானூர்தி (drone) ஒன்றை சோதனை செய்வதற்காக அமெரிக்காவில் உள்ள மிசௌரி பல்கலைக்கழகத்தை (Missouri University) சேர்ந்த டேவிட் எர்டோஸ் (David Erdos) மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கினர். இதில் சொல்லத்தக்க முன்னேற்றங்களை செய்துள்ளனர்.
மனிதனற்ற வான்வெளி ஊர்தி (Unmanned aerial vehicle)

ஐஇஇஇ-யின் ஏரோஸ்பேஸ் அண்ட் எலக்டிரானிக் சிஸ்டம்ஸ் (Aerospace and Electronic Systems Magazine, IEEE) இதழில் மே மாதம் வெளியான ஆய்வு அறிக்கை, இந்த தேடல் மற்றும் மீட்பு ஊர்தியின் முன்னேற்றங்களையும் அதன் தன்மைகளையும் விவரிக்கிறது. (படம்: விக்கி பொதுவகம்)

இந்த வடிவமைப்பு செயல்படுத்த தக்க வானூர்தியின் மாற்றுவிகிதம் (trade-offs) என சொல்லும் இடர் ஈட்டத்தை காட்டுகிறது. மேலும் தன்பாகங்களை தவிர்த்து பிற பாகங்களுடன் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதனையும், அதன் ஏற்றுகொள்ளும் தன்மைகளையும் விவரிக்கின்றது.

இந்த வானூர்தியை, வான்வெளி படமமைப்பிற்கும் (aerial mapping), சூழலியல் கண்காணிப்பிற்கும் (Environment monitoring), தேடல் மற்றும் மீட்பு (search and rescue) பணிகளுக்கும் பயன்படுத்தலாம். ஆயினும், இதனுடைய கம்பியற்ற இணைப்புகளையும் (wireless link), படிம செயலாக்கத்தையும் (image processing) சில அளவுக்குட்பட்டே செயல்படுத்த முடிகிறது. அவற்றை இன்னும் மேம்படுத்த வேண்டும் என எர்டோஸ் கூறினார்.

மூலம் 

Erdos, David; Erdos, Abraham; Watkins, Steve E., "An experimental UAV system for search and rescue challenge," Aerospace and Electronic Systems Magazine, IEEE , vol.28, no.5, pp.32,37, May 2013 doi: 10.1109/MAES.2013.6516147 keywords: {Aerial mapping;Aerospace electronics;Emergency services;Global positioning systems;Image processing;Radio spectrum management;Risk management;Unmanned aerial vehicles}, URL: http://ieeexplore.ieee.org/stamp/stamp.jsp?tp=&arnumber=6516147&isnumber=6516136Showing 0 items from page கட்டுரைகள் sorted by create time, create time, create time. View more »