புவி மேலோட்டில் படிந்திருந்த முன்காம்பிரியர் காலத்து முறிவு நீர் கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
Sat May 18 2013 12:58:25 GMT+0300 (EAT)
விஞ்ஞானிகள் புவி மேலோட்டில் படிந்திருந்த முன்காம்பிரியர் (Precambrian) காலத்து முறிவு நீரை (fracture fluid) கண்டறிந்துள்ளதாக நேச்சர் இதழில் மே 15 அன்று ஆய்வு அறிக்கை ஒன்று வெளியானது. 
100 கோடி ஆண்டுகளுக்கு முன்புள்ள நீரானது இதற்கு முன்பு கண்டறியப்பட வில்லை என விஞ்ஞானிகள் கூறினர். கனடாவின் டொரண்டோவிற்கு அருகில் உள்ள டிம்மின்ஸ் என்னும் சிறு நகரத்தில் தங்க சுரங்கத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் உள்ள லான்காஸ்டர் சூழலியல் மையத்தின் ஜி. ஹோலாந்தும் அவரது குழுவும் இணைந்து இது எத்தனைக் காலத்துக்கு முந்தையது என பார்த்தனர். இதற்காக கதிரியக்கச் சிதைவு (radioactive decay) முறையை பயன்படுத்தினர். இதன் முடிவு குறைந்தது 1.5 பில்லியன் ஆண்டுகள் காலம் கடந்த நீர் என அமைந்தது அனைவருக்கும் ஆச்சரித்தை தந்தது.

மூலம்