20 ஆண்டின் ஆய்வு: வெப்பமடைவதால் ஆர்டிக் பகுதியில் கரிமம் அதிகரிக்காது

இராஜ்குமார்
Fri May 17 2013 11:48:23 GMT+0300 (EAT)

Long-term warming restructures Arctic tundra without changing net soil carbon storage
Abstract : High latitudes contain nearly half of global soil carbon, prompting interest in understanding how the Arctic terrestrial carbon balance will respond to rising temperatures. Low temperatures suppress the activity of soil biota, retarding decomposition and nitrogen release, which limits plant and microbial growth. Warming initially accelerates decomposition, increasing nitrogen availability, productivity and woody-plant dominance. However, these responses may be transitory, because coupled abiotic–biotic feedback loops that alter soil-temperature dynamics and change the structure and activity of soil communities, can develop. Here we report the results of a two-decade summer warming experiment in an Alaskan tundra ecosystem. Warming increased plant biomass and woody dominance, indirectly increased winter soil temperature, homogenized the soil trophic structure across horizons and suppressed surface-soil-decomposer activity, but did not change total soil carbon or nitrogen stocks, thereby increasing net ecosystem carbon storage. Notably, the strongest effects were in the mineral horizon, where warming increased decomposer activity and carbon stock: a ‘biotic awakening’ at depth.
 
 
கடந்த 20 ஆண்டுகாலமாக அறிவியலாளர்கள் கண்டறிந்த ஆய்வின் முடிவு ஆர்டிக் பகுதியில் ஏற்படும் வெப்பமடைவின் காரணமாக கார்பன் என அழைக்கப்பெறும் கரிமம் அதிகரிக்காது என மே 15 அன்று நேச்சர் இதழில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சீதா சிஸ்ட்லா மற்றும் அவரது குழுவின் ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.
ஆர்டிக் பகுதிகளில் உள்ள பாசிகளும், புதர்களும்

 பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் இறப்பிலும், அதன் உடல்களின் சிதைவுகளிலும் ஏற்பட்ட கரிமம் ஆர்டிக் பகுதியில் ஏராளமானதாக தேங்கிக்கிடக்கிறது. இந்த பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பதினால் இந்த கரிமம், கார்பன்-டை-ஆக்சைடு என்னும் கரிம-இரு-உயிர்வாயுவாக மாற்றமடைந்து விடலாம் என அச்சமடைந்தனர் விஞ்ஞானிகள். ஏராளமான கரிமம் இருப்பதினால் உயிரினங்களுக்கு ஒவ்வாத கரிம-இரு-உயிர்வாயு அதிகமாக உருவாகி பூமியின் மொத்த உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாய் அமையும் என எண்ணியிருந்தனர். (Image Credit : Sadie Iverson)

 இதனால் பசுமைக்குடில் ஒன்று ஆர்டிக் பகுதியில் அமைத்திருந்தனர். அந்த பசுமைக்குடிலின் உள்ளே வெளிப்புற வெப்பநிலையை விட 2 பாகை அளவு வெப்பம் அதிகமாக இருக்கும்படி அமைத்திருந்தனர். 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்திய பிறகு, வெப்பமடைவதினால் ஆர்டிக் பகுதியில் உள்ள கரிம தேக்கம் அதிகரிக்கவில்லை என அறிந்தனர். அதாவது கரிம அளவு அதிகமாகும் அதே விகிதத்தில் கரிம சிதைவின் விகிதமும் உள்ளதினால், மொத்த சராசரி கரிம தேக்கம் அதிகரிக்காமல் மேலும் வலுவான பாதுகாப்பானதாக உள்ளது என ஆய்வின் முடிவு கூறுகிறது. 

 ஆனால் இதே நிலை எதிர்காலத்திலும் நீடிக்குமா என தெரியவில்லை என சீதா சிஸ்ட்லா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Comments