கூகிள் மற்றும் நாசா இணைந்து எதிர்கால செயற்கை நுண்ணறிவை உருவாக்க தொடங்குகிறது

இராஜ்குமார்
Fri May 17 2013 09:34:05 GMT+0300 (EAT)
கூகிள் மற்றும் நாசா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து துளிம கணினிகளைப் (quantum computers) பயன்படுத்தி எதிர்கால செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்காக அவை ஒரு ஆய்வகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

 கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் அமெஸ் ஆய்வு மையம் (Ames Research Centre) என்னும் இடத்தில் புதிதாக ஒரு துளிம எதிர்கால நுண்ணறிவு பயிற்சிக்கூடம் (Quantum Artificial Intelligence Lab) ஒன்றை அமைக்கவிருக்கிறார்கள். டி-அலை கட்டகங்களிலிருந்து (D-Wave Systems) தற்போது துளிம கணினியை முதல் நோக்கமாக கொண்டு அந்த ஆய்வகம் செயல்படும்.

 ஆய்வாளர்கள் துளிம கணினிகள் எப்படி இயந்திர அறிதிறனை (machine learnings) முன்னேற்றுகிறது என கண்டறிவர் என கூகிள் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Comments