வலசைபோகும் பறவைகளின் குறைவால் மணிப்பூரில் பறவை ஆய்வாளர்கள் அதிருப்தி

இராஜ்குமார்
Thu May 16 2013 22:21:49 GMT+0300 (EAT)

மணிப்பூர்: சாம்பல் கால் வாத்து, சீமைவாத்து, கடற்காகம், ஆலா என்பன போன்ற 62 வகை பறவையினங்கள் மணிப்பூரில் காணக்கிடைக்கும் என எண்ணி காத்திருந்த பறவை ஆய்வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கான்பூர் மாநிலத்தில் மணிப்பூர் மாவட்டத்தில் உள்ள குர்ரா என்னும் நீர்நிலையில் வழக்கம் போல் அல்லாமல் இந்த கோடைகாலத்தில் மிக மிக குறைவான பறவைகளே காணப்படுகின்றன.

 25000 முதல் 30000 பறவைகள் வரை பெரும்பாலும் வலசைபோகும் பறவைகள் (migratory birds) காணப்படும். ஆனால் தற்போது வெறும் 1000 முதல் 2000 பறவைகள் தான் காணப்படுகின்றன. இதற்கு காரணம் அந்த நீர்நிலைகளை ஒட்டி பெருகி வரும் விவசாயம் பெருக்கம், அதிகப் படியான மீன்பிடித்தல், வேட்டையாடல் போன்ற பலவற்றை சொல்லப்படுகிறது. சிலர் இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு தான் காரணம் என்கின்றனர்.

 இது பற்றிய அறிக்கையை அரசு, லோக்சபாவில் ஏப்பிரல் மாதம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 வழக்கமாக குர்ராவிற்கு வரும் பறவைகள் தற்போது திபெத்திய இமாலய பகுதிகள், நடு ஆசியா, உருசியா, மற்றும் சிபேரியா ஆகிய நாடுகளில் உள்ள நீர்நிலைகளுக்கு பறந்து சென்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
Comments