குறிமுறையற்ற டி.என்.ஏக்களே படிவளர்ச்சிக்கு மூலதனம், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
Thu May 16 2013 18:34:38 GMT+0300 (EAT)

மரபணு தொகுதிகளின் (genome) உட்கருவன்களில் (nucleotides) புரதக் குறிமுறையற்ற (non-coding) டி.என்.ஏக்களே உயிரினங்களின் படிவளர்ச்சிக்கு (evolution) மூலதனமாக விளங்கிறது என அண்மைய ஆய்வில் கண்டறிந்த விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

 கடந்த மே 14 அன்று நேச்சர் ஆய்விதழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உயிரினங்களின் மரபணுத்தொகுதிகளில் காணப்படும் உட்கருவன்களில் 2 விழுக்காடுகளே புரத குறிமுறையாக்கம் (protein coding) செய்யப்பட்டுள்ளது என்றும், மீதம் உள்ள 98 விழுக்காடுகள் புரத குறிமுறையற்ற உட்கருவன்களே காணப்படுகின்றன என்றும் உயிர்மி மற்றும் மூலக்கூற்று உயிரியல் மையத்தைச் (Centre for Cellular and Molecular Biology (CCMB)) சேர்ந்த அறிவியலாளர் ராகேஷ் கே. மிஸ்ரா கூறியுள்ளார். மேலும் உயிரினங்களில் உள்ள 2 விழுக்காடுகள் காணப்படும் குறிமுறையாக்க உட்கருவன்கள் அனைத்து உயிரினங்களிலும் ஒரே அளவே காணப்படுகிறது என விளக்கினார்.

 மற்ற குறிமுறையற்ற மரபணு உட்கருவன்களே எண்ணிக்கையில் வேறுபாடுகள் கொண்டனவாக உள்ளது. அவைகளே உயிரினங்களின் படிவளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது என கூறினார்.
 

Comments