எவரஸ்ட் சிகரத்தின் பனிப்பாறைகள் உருகுகிறது

இராஜ்குமார்
Thu May 16 2013 11:49:54 GMT+0300 (EAT)

உலகம் முழுவதும் வெப்பமயமாதலினால் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து வரும் வேலையில் எவரஸ்ட் சிகரத்தின் பனிப்பாறைகள் உருகுகின்றன என கடந்த மே 14 அன்று மெக்சிக்கோவில் நடைபெற்ற அமெரிக்காஸின் சந்திப்பில் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
 
கடந்த 50 ஆண்டுகளில் 3 விழுக்காடு எவரஸ்ட் சிகரத்தின் பனிப்பாறைகள் உருகியுள்ளது என்றும், பனிமூட்டம் 590 அடி (180 மீ) உயரம் மேலேறியுள்ளது என்றும் இத்தலியின் மிலன் பல்கலைக்கழக மாணவர் சுதீப் தகூரி கூறினார். 1962 ஆம் ஆண்டில் இருந்து சராசரியாக 1300 அடி (400 மீ) பனிப்பாறைகள் விரைந்து உருகியுள்ளது.
 
1992 ஆன் ஆண்டில் இருந்து வெப்பனிலை 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. மலை மற்றும் பனி 3.9 இன்ச் (100 மிமீ) ஆக பதிவாகியுள்ளது. எனினும் இது உலக வெப்பமயமாதலால் ஏற்படுகிறது என்றும் இதனை உறுதியாக சொல்ல இயலாது ஏனென்றால் அனைத்து இமாலய மலைகளிலும் இது போன்ற மாற்றங்கள் ஏற்படவில்லை என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.