காகிதங்களில் மின்னணு சுற்றுகளை அச்சிடும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
Thu May 16 2013 11:14:32 GMT+0300 (EAT)

கணினி மூலம் காகிதங்களில் ஆவணங்களை அச்சிடுவதைப் போன்று மின்னணு சுற்றுகளை அச்சிடும் தொழில்நுட்பத்தை சைனீஸ் அகாடமி ஒப் சயன்சஸில் உள்ள ஜிங்க் லியூ (Jing Liu) கண்டுபிடித்துள்ளார்.


இது விலை குறைந்த செலவில் நெகிழ்வுடன் கொண்ட ஒரு தொழில் நுட்பம். இது பயன்படுத்தி எறியக்கூடியதாகும். அறை வெப்பநிலையில் அச்சிடக்கூடிய காலியம்-இண்டியம் உலோகத்தை மையாகக்கொண்டு இது காகிதத்தில் அச்சிடப்படுகிறது. இதனை அச்சிட்டப்பின் சிலிக்கோன் பூச்சினை தடவ வேண்டும்.

இது எளிதாக மற்ற காகிதங்களை மடித்து வைப்பது போன்று நெகிழ்வுத் தன்மைக் கொண்தாகத் திகழ்கிறது. இது பற்றிய ஆய்வுத் தாளை நேச்சர் ஆய்விதழில் கடந்த மே 9 அன்று வெளியிட்டுள்ளனர்.மூலம்