அமெரிக்க அலிகேட்டர் பற்களின் இரகசியம்

இராஜ்குமார்
Thu May 16 2013 09:55:57 GMT+0300 (EAT)

அமெரிக்க அலிகேட்டர் முதலைக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிதாக முளைக்கும் பற்களின் இரகசியத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 


அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர் மிசிசிபியென்சிஸ் (Alligator mississippiensis) என்னும் கடல் முதலையின் பற்களை தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியலாளர் சென்ங் மிங் சௌங் ஆய்வு செய்து வந்தார். மூலகூற்று நுட்பங்கள் மற்றும் X-கதிர் படிமவியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி முதலையின் பற்களில் உள்ள தண்டு செல்களில் காணப்படும் ஒரு வேதிப்பொருளைக் கண்டறிந்தார். (Image Credit: Mary Keim/Flickr )

இது பற்றிய ஆய்வு அறிக்கை கடந்த மே 13 அன்று புரசீடிங்ஸ் ஆப் த நேசனல் அகாடமி ஒஃப் சயன்சஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கண்டறிந்த அந்த வேதிப்பொருளைப் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. 

முதலைக்கு உள்ள மொத்த 80 பற்களில் ஒவ்வொரு பற்களும், அதன் தண்டு செல்களும், திசுக்களும் தனி குடும்ப அமைப்பாக இணைந்துள்ளது. ஒவ்வொரு பல் விழுந்தவுடனும் கண்டறிந்த அந்த வேதிப்பொருள் அந்த தண்டு செல்களை துண்டி புதிய பற்களை வளரச் செய்கிறது. இதனால் அமெரிக்க கடல் முதலைகளுக்கு பற்கள் எப்பொழுதும் கிடைக்கப்பெறுகின்றன. 

சென்ங் மிங் சொங் இந்த வேதிப்பொருளைக் கொண்டு ஒரு நாள் நாம் மனிதர்களுக்கு பற்களை வளரச் செய்ய இயலலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

மூலம்