ஆண் சிலந்திகள் தன்னின உண்ணிகளாக செயல்படுகின்றன

இராஜ்குமார்
Wed May 15 2013 17:17:59 GMT+0300 (EAT)

ஆண் சிலந்திகள் தன்னின உண்ணிகளாக செயல்படுகின்றன என புதிய ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது. தன்னின உண்ணிகள் என்றால் தன்னினத்தை தானே இரையாக்கி கொள்ளும் விலங்கினங்கள் ஆகும். 
 
மிக்காரியா சொசியாபிலிஸ் (Micaria sociabilis) என்னும் இனத்தைச் சேர்ந்த ஆண் சிலந்திகள் பெரிய பெண் சிலந்திகளுடன் உடலுறவு கொள்ளாமல் அதனை கொன்று உணவாக்கி கொள்கிறது. அது சிறிய இளஞ்சிலந்திகளுடனே உடலுறவு கொள்ள விரும்புகிறது.
 
 
சிக் குடியரசில் உள்ள மசாரைக் பல்கலைக்கழகத்தின் லென்கா செண்டன்ஸ்கா என்பவரும் அவரது உடன்பணியாளரான சிடானிஸ்லவ் பெக்கர் என்பவரும் இணைந்து பிகேவிரியல் ஈக்காலஜி அண்டு சோசியோபையாலஜியில் வெளியிட்ட ஆய்வு அறிக்கை இதனை கூறுகிறது. சுமார் 160 சிலந்திகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மூன்றில் ஒரு பகுதி மேற்கூறியபடி பெண் சிலந்திகளை கொன்றுவிடுவதாய் உள்ளது.
 
ஒரே வயதுடைய ஆண், பெண் சிலந்திகள் சந்திக்கும் பொழுது பெண் சிலந்திகள் உயிரிழப்பதில்லை. வயதான பெண் சிலந்திகள் இளம் சிலந்திகள் சந்திக்கும் பொழுது பெண் சிலந்திகள் உயிரழக்க நேரிடுகிறது. பெண் சிலந்திகள் ஆண் சிலந்திகளை ஒரு முறை கூட கொள்வதைப் பார்க்கவில்லை என்றும், இதே போன்று தன்னின உண்ணியாக விளங்கும் வேறு இனங்கள் உள்ளனவா என ஆய்வு செய்யயிருப்பதாக அவர்கள் மேலும் கூறினர்.
 
மேற்கோள்கள்
Comments