புதியதொரு நச்சுத்தன்மையற்ற தீச்சுணக்கு மேற்பூச்சு கண்டுபிடிப்பு

Rajkumar
Wed May 15 2013 11:40:27 GMT+0300 (EAT)

A newly made chemical fire-retardant is found to have a non-toxic effects and can be used commercially, researchers in Grunlan’s lab says. Most of the existing fire-retardant coating has a toxic effects for long time exposure and is banned in many countries. Health hazard matters. Galina Laufer and his colleagues from Grunlan’s lab teamed up to find an alternative to these non-toxic coatings despite their requirements to coat in furnitures in order to rectify from fire accidents. The team reports on April 22 in ACS Macro Letters.

நச்சுத்தன்மையற்ற புதிய தீச்சுணக்கு மேற்பூச்சு ஒன்றினை குரூன்லான் ஆய்வக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தீச்சுணக்கு மேற்பூச்சு என்பது எரியும் தீயினை மேலும் பரவவிடாமல் செய்வதற்காக மரப்பொருட்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப்பொருட்களின் மீது பூச வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒரு திரவம் அல்லது மை ஆகும்.

download
இவ்வகையான தீச்சுணக்கு மேற்பூச்சுக்கள் நச்சுத்தன்மை வாய்ந்ததாக காணப்படுவதினால் வீட்டு உபயோகப்பொருட்களில் பயன்படுத்துவது பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூன்லான் ஆய்வகத்தில் உள்ள அறிவியலாளர்கள் சிலர் நச்சுத்தன்மையற்ற தீச்சுணக்கு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

ஏப்பிரல் 22, 2013 அன்று ஏசிஎஸ் மேக்ரோ லெட்டர்ஸ் ஆய்விதழில் குரூன்லான் ஆய்வகத்தைச் சேர்ந்த கலினா லாபர் மற்றும் அவரது குழுவினர் இணைந்து கண்டறிந்த இந்த புதிய தீச்சுணக்கு மேற்பூச்சை பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது.

இவ்வகையான பூச்சுகள் எரியும் பொழுது எரிக்கயியலா வாயுக்களை வெளியிடுவதனால் இது தீயிணை பரவ விடாமல் செய்கிறது. தற்போது இவர்கள் கண்டறிந்துள்ள இந்த தீச்சுணக்கு பூச்சானது இரண்டு பல்லுறுப்புகளை இணைக்கப்பட்டதாக அமைந்துள்ளது. அவை பாலிவினைல் சல்ப்வோனிக் அமில சோடியம் உப்பு மற்றும் சிங்கிறால், இறால் மற்றும் பிற மேல்ஒட்டுக் கணுக்காலிகள் ஆகியவற்றின் ஓடுகளால் உருவாக்கப்பட்ட சிட்டோசன் ஆகிய இரண்டுமாகும்.

குரூன்லான் ஆய்வாளர்கள் மிக அதிகமாக எரிக்கக்கூடிய பொருளான பாலியூரித்தேன் நுரைப்பஞ்சில் இந்த பூச்சை சோதனை செய்து பார்த்தனர். சில நானோமீட்டர் தடிப்பாக இந்த தீச்சுணக்கு பூச்சினை தடவியவுடன், லாபர் அந்த பஞ்சை 10 நொடிகள் பற்ற வைத்தார். தீயானது கனிந்து அமர்ந்துவிட்டது. மேலும் அந்த பஞ்சு உருகாமல் கருகி இருந்தன. தீ அந்த பூச்சை தகர்த்து உடைத்து வெவ்வேறு அமோனியம், நீர் மற்றும் சல்பர் டைஆக்சைடு பிணைப்புகளை உருவாக்கிறது. அனைத்தும் எரிக்கயியலாத வாயுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற தீச்சுணக்கு பூச்சுக்களை பஞ்சுகளில் முழுவதும் கலக்குவது போலல்லாமல், இந்த பூச்சை அதன் மேற்பரப்பில் மட்டும் பூசினால் போதும். இதனால் வீட்டு உபயோகப் பொருட்களில் 20 விழிக்காடு தேவைப்படும் பிற பூச்சுக்கள் போலல்லாமல், வெறும் 5 விழுக்காடு மட்டுமே தேவைப்படும் என மார்கியூட்டி பல்கலைக்கழகத்தின் சிறப்பு தீச்சுணக்கு பொருட்கள் ஆய்வாளரான சார்லஸ் வில்கி கூறினார்.

மேற்கோள்கள்
G. Laufer et al. Exceptionally flame retardant sulfur-based multilayer nanocoating for polyurethane prepared from aqueous polyelectrolyte solutions.  ஏசிஎஸ் மேக்ரோ லெட்டர்ஸ் (ACS Macro Letters), ஏப்பிரல் 12, 2013.