வாழும் கணினிகளுக்காக கட்டமைக்கப்பட்ட உயிரியல் திரித்தடையம்

இராஜ்குமார்
Fri Apr 12 2013 19:07:56 GMT+0300 (EAT)
அஅநெஅ (அஃகற்ற அரபீறை நெற்றை அமிலம்) சார்ந்த மாற்றிகள் நோய்களின் சிகிச்சை மற்றும் அறுதியிடலில் பயன்படுத்தலாம்.
ஸ்டார் ட்ரெக்கிற்கானப் பழைய மூவடத்தைச் சேமிக்க. ஒரு நாள், அஅநெஅ (DNA) சார் சுற்றமைப்பு கொண்ட சிறிய உயிரியல் கணினிகள் நோய்களை அறுதியிடும்.

அ.அ.நெ.அ துண்டங்களையும், அ.அ.நெ.அ பொருத்தல் வேதிப்பொருட்களையும் பயன்படுத்தி, திரிதடையம் (transistor) மற்றும் மின்னணுயியலை ஏரணப் (logic) பணிகளைச் செய்ய உதவும் ஒரு மாற்றி (switch) போன்றவைகளை உள்ளடக்கிய ஒரு தொகுதிக் கணினி மூளையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அறிவியல் மார்ச் 28இல், அ.அ.நெ.அ (டிஎன்ஏ) அடிப்படையிலான கணினிகளின் ஆற்றல் அதிகரிக்க திரியெழுதியை மாதிரியாகக் கொண்ட உயிரியல் மாற்றியை, மற்ற உயிரியல் சாதனங்களில் ஒன்றாக இணைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

எச்சரிக்கைச் குறிப்பலைகளை (signal) வெளிக்காட்டவும், மற்றும் பின்னர் பெருங்குடல் புற்றுநோய் (colon cancer) அறிகுறிகளைக் கண்டறியவும், தயிரில் காணப்படும் ஒரு வகையான சிறுவாழூண் நுண்ணியை (probiotic bacteria), இந்த மாற்றிகளைப் (பொத்தான்களைப்) பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் நிரலாக்கம் செய்ய இயலலாம், என்று சிடான்போர்டு (Stanford) பல்கலைக்கழகத்தின் ஆய்வு இணையாசிரியர் செரோம் பென்னட்டு (Jerome Bonnet) கூறினார். "பாக்டீரியா உண்மையில் உங்கள் குடல் வழியாக பயணித்து, மலத்தில் ஒரு வர்ணத்தை உண்டாக்கும்," என்று அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு சுட்டிப்பேசி (smartphone), தொலைக்காட்சி மற்றும் ஐபாடுகளின் உள்ளேயும், அதன் கணினிச் சில்லுகளில் இலட்சக்கணக்கான திரித்தடையங்கள் நிரப்பப்பட்ட மின்சுற்றுகளைக் கொண்டுள்ளது. இந்த சிறிய மாற்றிகளை திறப்பது மற்றும் அடைப்பதின் மூலம், சில்லில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் மின்சாரத்தை திருப்ப முடியும். ஆனால் அணுக்களின் உள்ளே கூட ஒரு சில இணைக்கப்பட்ட வரை மாற்றிகள் சக்திவாய்ந்ததாக இருக்க முடியும், எம்ஐடி செயற்கை உயிரியலாளர் டிமோதி லு கூறுகிறார். "எளிய சுற்றுகள் ஒருவேளை சதுர வேர்களைக் கணக்கிட முடியாமல் போகலாம் என்றும் அதனால் சில சுவாரசியமான செயல்பாடுகளுக்காக இந்த செல்லை மேக்புக் சில்லில் பயன்படுத்துக் கூடாது" என்று அவர் கூறுகிறார். ஆனால் மரபணுக் கணினிகள் வழக்கமான மின்னணுக் கணினிகள் செல்ல முடியாத இடங்களில் செல்ல முடியும்.

உலோக மின்சுற்றுக் கம்பிகள் வழியாக மின்னிகள் பாய்வதை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக உயிரியல் மாற்றிகள் வாழும் நுண்ணிகளில் உள்ள அ.அ.நெ.அ கம்பி வழியாக ஊணம் பாய்வதைக் கட்டுப்படுத்துகிறது. கம்பி வழியாக ஊணம் கடக்கும் பொழுது, அது குறிப்பிட்ட மூலக்கூறுகளை உருவாக்க மெய்மிகளிடம் செய்தி அனுப்புகிறது - எடுத்துக்காட்டாக, ஒரு நபரின் மலத்தில் பச்சை வண்ணம் உண்டாக்கும் மூலக்கூறுகள்.

பொன்னெட்டு அ.அ.நெ.அ தொகுதியைக் மாற்றும் கம்பி திருப்பும் நொதிகளுடைய மாற்றியை திருப்பினார். தானுந்துகள் வானூர்தி நிறுத்தல் நிலையத்தில் இருந்து ஒரு வழிப்பாதைக்கு பிரிந்து செல்வது போன்று, அ.அ.நெ.அ வலது பக்கம் பார்த்தகாக இருந்தாலும் கூட, செய்தியை உருவாக்கும் ஊணமானது முன்பக்கமே நகர்ந்தது.

வெவ்வேறு மாற்றிகள் மற்றும் கம்பி திருப்பிகளை ஒப்பிட்டு பார்த்ததன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஒரு மெய்மிகளின் செயல்பாடுகளை நிரலாக்க முடிந்தது. சர்க்கரை மட்டும் அருகில் இருந்த போது, அல்லது சர்க்கரை மற்றும் மருந்துகளும் அருகில் இருந்த போது மட்டுமே அவர்களால் நுண்ணிகளைப் பச்சையாக ஒளிர வைக்க முடியும்.

இது ஒரு எளிமையான ஏரணமாகவும், ஒரு சில உள்ளீடு மற்றும் வெளியீடுகளை மட்டுமே கையாளக்கூடியதாக இருந்தாலும், சில வேதிப்பொருட்களுக்கு இணங்கும் படி ஆராய்ச்சியாளர்கள் மெய்மிகளை நிரலாக்கப் பயன்படுத்தலாம் என்பதினால் இது பயனுள்ளதாக இருக்கும் என பொன்னெட்டு கூறினார்.

மரபணுக் கணினிகள் உங்கள் மடிக்கணினியை இடமாற்றப் போவதில்லை என்றாலும், அவர் குழுவும், பிறரும் மிக நேர்த்தியானதொரு சிறிய கருவிகளை உருவாக்கு முயற்சிப்போம் என்று அவர் மேலும் கூறினார். கடந்த ஆராய்ச்சியில், இக்குழு அ.அ.நெ.அ (டிஎன்ஏ) அடைப்படையிலான தரவு சேமிப்பகம் உருவாக்கி, மெய்மிகளுக்கு இடையில் மரபியல் தகவல்களை எப்படி பரிமாற்றம் செய்யலாம் என்பதை விளக்கினர். தற்போது, உயிரிப்பொறியாளர்கள் பல்வேறு உதிரிப்பொருட்களினால் உயிரியல் கருவிகளை செய்து, தனிப்பட்டக் கணினிகளுடன் இணைத்து ஒரு பன்மெய்மி இணையத்தை அமைக்க பணியாற்றிவருகின்றனர்.