சுண்டெலியின் விழிப்புள்ளிச் சிதைவுக் குறிகளைக் குறைக்கும் கண்மருந்துத் துளிகள்

இராஜ்குமார்
Mon Apr 08 2013 18:35:11 GMT+0300 (EAT)
விழித்திரையில் நிணத்தை அதிகரித்தல் என்பது அடிக்கடி காணப்படும் பார்வை நோயின் முரட்டு இரத்த நாள வளர்ச்சியைத் தடுக்கின்றன.

"பொதுவான வயது-சார் பார்வை இழப்பு நோயைக் கொண்டிருக்கும் மனிதர்களின் கண் பார்வையைப் பாதுகாக்குமாறு, ஒரு நாள் நிணம் குறைக்கும் கண்மருந்துத் துளிகள் அமையலாம்" என்று ஒரு புதிய படிப்பு பரிந்துரைக்கிறது.

பழைய சுண்டெலிகளின் உயிர்மிகளிடம் இருந்து நிணத்தை அகல ஊக்குவிக்கும், ஒரு தரம் கொண்ட வயது-சார் புள்ளிச் சிதைவிற்கான கண்மருந்துத் துளிகள், இரத்த நாளங்கள் விழித்திரைக்கு சென்றுவிடாமல் காக்குமாறு எதிர்ப்பு உயிர்மிகளைப் புத்துயிரூட்டுகிறது. 50 மற்றும் வயதானவர்களுக்கு அதிகமாக உள்ள பார்வை இழப்பு பாதிப்பு நிணப் பெருக்கம் இந்நிலையை மேலும் கூட்டும் என்று கண்டுபிடிப்பு பரிந்துரைகிறது.

புள்ளிச் சிதைவு உலர்ந்தும் ஈரமாகவும் இரண்டு விதங்களில் காணப்படுகிறது. நோயின் ஆரம்ப நிலையான உலரும்பொழுது, விழித்திரை மையத்தில் உள்ள மெய்மிகள் இறக்கின்றன, பார்வை மங்கலாகின்றன. இந்த நிலையில் விழித்திரையில் உள்ள நிணம் உட்கொண்ட கொழுமிய மஞ்சள் கொத்துக்களாக அடிக்கடி உருவாக்கப்படும். இவ்வகைப் படிதலானது, ஒரு நபரின் இரத்த நாளங்களைப் பின் விழிக்கு பரவி, விழித்திரை மெய்மிகளை அழிக்கக்கூடிய ஈர வடிவ நோயை வளர்க்கும் அபாயம் உள்ள எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கும். நோயாளிகள் தங்கள் பார்வைப் புலத்தின் நடுவில் ஒரு துளையைகொண்டிருக்கும்.

முந்தைய ஆய்வுகளில், செயின்ட் லூயிஸ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ராஜேந்திர ஆப்தே மற்றும் கூடப் பணிபுரிவோர்கள் யாவரும், பேருண்ணிகள் எனப்படும் எதிர்ப்பு மெய்மிகள் புள்ளிச் சிதைவில் ஈடுபட்டுள்ளன என்பதைக் காட்டினர். அவரது குழு பேருண்ணிகள் விழியினுள் இரத்த நாளங்களின் ஊடுருவலை நிறுத்துவதன் மூலம் பார்வையைப் பாதுகாக்கின்றன என கண்டறிந்தது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மேலும் வயதான பேருண்ணிகள் நிணம் கொண்டால் உப்பிவிடுகிறது என்றும் இரத்த நாளங்களின் உட்புகுதலை நிறுத்த முடிவதில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 வெளியிடப்பட்ட உயிர்மி வளர்ச்சிதைமாற்றத்தில் உள்ள இந்தப் புதியப் படிப்பிற்காக ஆப்தேவின் குழு இளம் மற்றும் முதிர்ந்த எலிகளிடமும் மனிதர்களிடமும் இருந்து பேருண்ணிகளை சேகரித்தனர்.பின்னர் ஆராய்ச்சியாளர்கள் மெய்மிகளில் உள்ள சுபிபே (சுமூஎ (சுரயயீறை மூ எரியம்) பிணைப்புப் பேழை) இடமாற்றிகள் எனப்படும் நிணத்தினை உந்தும் ஊண (ஊணம் - புரதம்) எண்ணிக்கையைக் கணக்கிட்டனர். பழைய பேருண்ணிகள் இளம் மெய்மிகளை விட குறைவான உந்துதலைக் கொண்டுள்ளது. பழைய மெய்மிகளால், குறிப்பாக சுபிபேஇ1 எனப்படும் குறந்த நிண உந்தல் எண்ணிக்கை கொண்டவை, இள மெய்மிகளாலும் கூட, இரத்த நாள வளர்ச்சியை எதிர்க்க முடியவில்லை.

நுண்ணியஅநெஅ (அரபீறை நெற்றை அமிலம்) எனப்படும் ஒரு மரபணுவின் சிறிய துண்டிற்கு நிணமுந்துத் திறனைக் குறைக்கபபடுவதை அந்தக் குழு கண்டறிந்தனர். நுண்ணிய அநெஅ நுஅ-33 மெய்மிகளின் வயதை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.ஏனெனில் இந்த அநெஅ (RNA) துண்டு சுபிபேஇ1(ABCA1) உந்தின் தயாரிப்பில் தடைகளை வைக்கிறது, இதனால் பேருண்ணிகள் முன்பு அது செய்தது போலவே நிணத்தைக் குறைக்க முடியாது விளைகிறது.

நுஅ-33 (miR-33) தடுத்தல் அல்லது பிற நிணக்கொழுப்பு விடும் முறைகளை ஊக்குவிக்கும் மருந்துகளைப் பயன்படுத்தல் என்பது இரத்த நாள வளர்ச்சியை இருத்தி கொள்ளும் பேருண்ணிகளின் திறனை மீட்டெடுக்க முடியும் என்று ஆப்தே குழு கண்டறிந்துள்ளது.நுண்ணியஅநெஅ தடுப்பி அல்லது மருந்துகளின் ஊசிப் போடப்பட்ட எலிகளின் கண்களில் மருந்துப்போலிச் சிகிச்சையளிக்கப்பட்ட விலங்குகளை விட குறைந்த இரத்த நாளங்களே நிலவுகிறது மேலும் இவ்வூசியுடன் நிணத் திணிப்பிற்காக கண்ணில் மெய்மிகளை தூண்டும் கண் சொட்டுமருந்துகளும் வேலைக்கு ஆகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆகையால் மருத்துவர்கள், முழு உடல் சிகிச்சையளிப்பதனால் ஏற்படும் பின் விளைவுகள் இன்றி மக்களின் கண்களைக் குணப்படுத்த முடியும்.

பெதசுடாவில் உள்ள தேசிய கண் கழகத்தில் கண் நோய்களை படித்துவரும் மரபியலாளர் ஆனந்து சுவரூபம், "ஆப்தே குழு, நிணம் ஒரு விளையாடுவன, குறிப்பாக ஈரமான புள்ளிச் சிதைவு வடிவத்தில் எனக் காட்டியுள்ளனர்" என்று கூறினார். மரபணு ஆய்வுகள், மெய்மிகள் நிணத்தை எவ்வாறு திணிக்கிறது என்றும், கண்ணில் புள்ளிச் சிதைவு எப்படி உருவாகிறது என்பதனையும் விளக்குகிறது என்று அவர் கூறினார்.

கண்ணில் நிணம் குறைக்கும் கண் சொட்டு மருந்துகள் பயன்படுத்தப்படும் சிகிச்சையை உண்டாக்க இன்னும் பல பாதுகாப்பு ஆய்வுகள் செய்ய வேண்டி வந்தாலும், அவை பயன்பாட்டுக்கு வந்தால் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று சுவரூபம் கூறினார். ஈரமான புள்ளிச் சிதைவுக்கு மாதாமாதம் இரத்த நாளங்களை வளர்க்கும் மருந்து ஊசிகள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீங்கள் 80 வயது முதியவராக இருந்தால் மாதாமாதம் ஊசிப்போடுவதை நிறுத்துவது நல்லது என்று அவர் மேலும் கூறினார்.