துளிம (குவாண்டம்) மறைப்பியல்

Rajkumar
Sat Apr 06 2013 14:17:36 GMT+0300 (EAT)


தகவல்களைப் (உள்ளுருமை
களைப்) பாதுகாப்பதற்காக, வானூர்தியில் இருந்து தரைத்தளத்திற்கு அனுப்பப்படுகிற ஒளியன்களின் ஒரு துல்லிய ஒளிக்கற்றை மீது உடைக்கமுடியாத ஒரு மறையீட்டுத் திறவியை (encryption key) ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். செய்மதிகளுக்கு ஒளியன்களை செலுத்திப்பெறுமாறு டத்துதலை அடிப்படையாகக் கொண்ட பத்திரமானதொரு உலகளாவிய தெரிவிப்பு வலையமைப்பை ஆக்குதற்கு மார்சு 31 நேச்சர் போட்டோனிக்சில் (Nature Photonics) அறிக்கையிட்ட இந்த சோதனை இன்றியமையாத ஒரு முன்னேற்றமாகும்.

துளிம இயக்கவியல்களை முன்னிருத்தி தெரிவிப்பு தொடர்புகளைப் பத்திரமாக்கும் எண்ணமானது புதிதுதல்ல: 1980களில் இருந்தே, தனிப்பட்ட சுழற்சிகளை அனுப்புநர், பெறுநர் மட்டும் அறியக்கூடிய வகையில் ஒளியன்களின் தொகுதிகளோடு மறையீட்டுத் திறவிகளை அறிவியலாளர்கள் படைத்துள்ளனர். வேறு மூன்றாம் தரப்பு அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் போழ்து,  அந்த ஒளியன்களின் சுழற்சி மாற்றப்பட்டு அது தெரிவிக்கும் தரப்பினரிடம் தகவல் பரிமாற்றத்தை நிறுத்தும் படி எச்சரிக்கைச் செய்கிறது.

அனுப்புநரும், பெறுநரும் ஒளியன்களை ஒவ்வொன்றாகக் கண்டறிந்து கையாள அனுமதிக்கும் ஒரு பலமான தொடர்பை, எந்தத் துளிம தெரிவிப்பிற்கும் வரும் தடைகள் நிறுவுகிறது. நிலையான புள்ளிகளுக்கு இடையே இது நிறைவுற கடினமானதாக இருக்கும், ஆனால் மியூனிச்சு (Munich) என்ற இடத்தில் உள்ள இலூடுவிக்கு மேக்சிமிலிஅன்சு பல்கலைக்கழகத்தின் (Ludwig Maximilians University) இயற்பியலாளர் செபாசுட்டியன் நெளரெத் (Sebastian Nauerth) அவர்களும் அவரின் குழுவினரும் மணிக்கு 300 கி.மீ-இல் பறக்கும் வானூர்தியில் இருந்து ஒளியன்களை அனுப்பிப் பார்த்துள்ளனர்.

20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு தரை நிலையத்திற்கு, ஒளியன்களின் குறுகியக் கற்றையொன்றை அனுப்பும் ஒரு சீரொளியை அந்த வானூர்தியில் ஆய்வாளர்கள் பொருத்தியுள்ளனர். அதன் செய்கணம் (signal) போதிய வலுவானதாக இருக்கிறது என்றும், அனுப்புநர் வானூர்தியிலும் பெறுநர் தரை நிலையத்திலும் இருந்து கொண்டு துளிம மறையீட்டுத் திறவியை நிறுவக்கூடிய தடையங்காணுதல் போதிய துல்லியமானதாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் அறிக்கைக் கூறுகிறது. இவ்வகைக் திறவி, ஒரு நாள் உலகில் எங்கிருந்து அனுப்புகிற செய்திகளையும் குறிவிலக்கம் செய்யவும், செய்மதி வழியாக மீளிடவும் பயன்படக்கூடும்.