பனிப்பாறைகள் பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வருகின்றன

இராஜ்குமார்
Wed Jan 20 2016 00:19:11 GMT+0300 (EAT)

புதிய ஆய்வுகள் பனிப்பாறைகள் சிறிய அளவில் ஆனாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடிய அளவில் பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக போராடிவருகின்றன என கூறுகின்றன. மிதக்கும் பனி மலைகள் கனெக்டிகட் அளவு அல்லது அதற்கும் பெரிய அளவு உள்ளவைகள் நிலத்தின் பனிப்பாறை பகுதிகளாக இருந்த சமயம் பாறைதுண்டுகளை சுரண்டி எடுத்து செல்கின்றன. பின்னர் கடலை சென்றடைந்து உருகத்துவங்கிய பின்னர் அவை மிகுந்த அளவு இரும்பு சத்து மற்றும் பிற உயிர்சத்துக்களை அண்டார்டிகா பகுதியில் உயிர்சத்து குறைவாக உள்ள நீரில் வெளிவிடுகின்றன. இவை கடலின் உணவு சுழற்சியின் முதல் நிலையில் இருக்கும் மற்றும் வெப்பம் வெளிவிடும் கரியமில வாயுவை உறிந்து கொள்ளும், ஒளிசேர்க்கை செய்யக்கூடிய நுண்ணுயிரான ஃபைடோப்ளாங்க்டன் வளர்வதற்கு தேவையான உயிர்சத்தை அளிக்கின்றன. 2003 முதல் 2013 வரை சேகரிக்கப்பட்ட செயற்கைகோள் விவரங்கள் பனிப்பாறைகளில் இருந்து நூற்றுக்கணக்கான மைல் தூரத்தில் ஃபைடோப்ளாங்க்டன்களின் தொகை அதிக அளவில் உள்ளன என நேச்சர் ஜியோசயின்ஸில் ஆய்வாளர்கள் இன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த மலர்வுகள் (உதாரணமாக ஜனவரி 2013இல் காட்டியபடி பச்சைய அளவுகள் மஞ்சள் மற்றும் சிவப்பாக; கருமை நிறமுடையவை மேகங்கள்) பனிப்பாறைகள் கடந்த சென்ற பின்னர் ஒரு மாதம் வரை நீடித்து இருக்கின்றன என குழு அறிவிக்கின்றது.

மேலும், காற்று மற்றும் சுழல் மெதுவாக நகரும் பனிப்பாறைகளிடமிருந்து உயிர் சத்தை எடுத்து கொண்டு சேர்க்கலாம் (பனிப்பாறையின் வடகிழக்கு மூலையில் உள்ள மஞ்சள் நிற வடிவம் மையத்தில் காட்டப்பட்டுள்ளது). முந்தைய கள ஆய்வில் கிடைத்த விவரங்களை உபயோகித்து, அக்குழு மிகப்பெரிய அளவுள்ள அண்டார்டிக் பனிப்பாறைகளிலிருந்து வெளியிடப்பட்ட

கனிமங்கள் மற்றும் பிற உயிர்சத்துக்கள் (18 கிலோமீட்டர்க்கும் அதிகமான) 20%க்கும் அதிகமான கரியமில வாயுவை (சீஓ2) உறிஞ்சுகின்றன என கூறுகின்றது. முந்தைய ஆய்வுகளின்படி அதன் அளவு 44 மில்லியன் முதல் 146 மில்லியன் மெட்ரிக் டன் வரை

எரிவாயுக்கள் எரிக்கப்படுவது மற்றும் 2013இல் ஏற்பட்ட பிற தொழில்துறை செயல்பாடுகளால் உருவாகும் சீஓ2 ,வின் அளவு கணக்கிடப்பட்ட 35.3 பில்லியன் மெட்ரிக் டன் அளவு சீஓ2 , வை சிறு விகிதத்தில் குறைக்கின்றது என தெரியவருகிறது.