குழந்தைகள் பேசக்கற்றுக் கொள்வதற்கு கீச்சொலியே ஆரம்பம்

இராஜ்குமார்
Fri Apr 05 2013 22:52:31 GMT+0300 (EAT)

குழந்தைகளின் நெகிழ்வான கீச்சொலிகளே அவர்களை பிறகு பேச வைப்பதாக இருக்கலாம். குழந்தைகள் முதல் சொற்களைப் பேசுவதற்கு சிக்கலான பல முயற்சிகளை எடுக்கிறது. மூன்று மாதங்களுக்கு பின்னர், குழந்தைகள் எளிதாக கீச்சொலி, கோபம் மற்றும் பச்சொலி போன்ற மூன்று வகையான ஒலிகளின் மூலம் ஆதரவில் இருந்து நடுநிலை, எதிர்ப்பு வரை அனைத்து விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது.

சுதந்திரமாக ஒலிகளைப் பல உணர்வுகளுடன் இணைப்பதையே பேசப்படும் மொழியின் அடிப்படை கட்டமைப்பாக குறிக்கலாகும் என (இ)டென்னசியில் உள்ள மெம்பிசு பல்கலைக்கழகத்தின் உளமொழியியலாளர் (psycholinguist) டி. கிம்பிரோ ஒள்ளரும் (D. Kimbrough Oller), அவரின் துணையறிஞர்களும் கூறுகின்றனர். உச்சரிப்பு மற்றும் சூழ்நிலையைப் பொருத்து எந்தவொரு சொல் அல்லது சொற்றொடரும் உளநிலையைக் குறிக்கக்கூடியன. குழந்தைகள் என்ன உணர்கின்றன என்பதை உணர்த்த குழந்தைகளின் நெகிழ்வுத் தன்மைக் கொண்ட ஒலிகள் தான் அவர்கள் சொற்களைக் கற்றுக்கொள்வதற்கு மூலப்பணியாக இருக்கிறது என்று அறிவியல்களின் தேசியக் கழக நடவடிக்கைகளில் (Proceedings of the National Academy of Sciences) ஏப்ரல் 1 அன்று அறிவியலாளர்கள் தீர்வளித்தனர்.

மனிதக் குழந்தைகளுக்கு இந்தத்திறன் எழுந்ததும், மொழிப்பரிணாமம் வளர்ந்தது என ஒள்ளர் கூறுகிறார். கபி மற்றும் குரங்கு ஆய்வாளர்கள் குறிப்பாக ஒரு பொருளுடைய மொழிப்புகளை படிப்பவர்கள். 

"தற்போதைய மாறாத முடிவு,  ஏற்கனவே 3 ஆம் மாதத்தில் ஒரு மனிதக்குழந்தையானது நிருபீக்கப்பட்ட பிற குரங்கினங்களின் எந்த வயதுக் குரலைக் காட்டிலும் எளிதான குரல் நெகிழ்வுகளைக் கொண்டுள்ளது" என ஒள்ளர் கூறுகிறார். ஒள்ளரின் குழு, பொம்மைகளும், மரச்சாமான்களும் உள்ளடக்கிய ஆய்வரங்கு ஒன்றினுள், குழந்தைகள் அவர்களின் பெற்றோருடன் விளையாடுவதை கண்காணித்தனர். ஒரு வயது வரையில் குழந்தை ஏற்படுத்திய கிட்டத்தட்ட 7000 பச்சொலிப்பை ஒலிப் பகுப்பாய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

பயிற்சி அளிக்கப்பட்ட ஆய்வாளர்களைக் கொண்டு அவ்வொலிகள் அனைத்தும் அக்குழந்தை தான் ஏற்படுத்தியனவா என்றும், மேலும் குழந்தையின் முக பாவனைகளை வைத்து அதன் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளையும் தெளிவாக பிரித்தறிந்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் இக்குழந்தைகள் வெளிப்படுத்தியது இம்மூன்று முக்கிய ஒலிகளைத் தான். அதிகமாக சிரிப்பும், அழுகையும். மேலும் 7 மாதங்களுக்கு பின்னர், குழந்தைகள் உயிரொலிப் போன்ற ஓசையை அடிக்கடி எழுப்புகின்றன.