5000 ஆண்டு பழமைவாய்ந்த மம்மி உடலில் பழமையான டாட்டோ!

இராஜ்குமார்
Fri Jan 15 2016 00:00:08 GMT+0300 (EAT)

இரண்டு மம்மி உடலில் கண்டுபிடிக்கப்பட்ட டாட்டோக்கள் பல ஆண்டுகளாக எந்த மம்மியில் உள்ள டாட்டோ உலகின் பழமையான டாட்டோ என்ற பேச்சு அறிவியலாளர்கள் இடையே அடிபட்டுவருகிறது.
இத்தாலி ஆல்ஃப்சில் 1991ல், சுமார் 5250 ஆண்டுகள் பழமை வாய்ந்த பதப்படுத்தப்பட்ட மம்மி உடலில் பல டாட்டோக்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஓத்சீ என்று அழைக்கப்படும் இந்த மம்மிக்கு மொத்தம் 61 டாட்டோக்கள் காணப்படுகிறது. கருப்பு கோடுகளாக காணப்படும் இந்த டாட்டோக்கள் நிலக்கரியால் தோலின் மீது உராய்த்து வரையப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

1980ல் சிலியில் கண்டறியப்பட்ட மம்மியில் தென் அமெரிக்காவில் உள்ள சின்கார்ரோ கலாச்சார மீசைவடிவான கருப்பு கோடுகள் பழமையான டாட்டோவாக கருதப்படுகிறது. அந்த மம்மியின் கன்னம் இருபுறத்திலும் காணப்படும் இந்த டாட்டோவே உலகின் மிக பழமையானது அறிஞர்கள் கருதினர். ஆனால் ஒரு புதிய ஆய்வு முன்பு மேற்கொள்ளப்பட்ட கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு இந்த மம்மி 4563 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது அல்ல என கூறியுள்ளது.

டென்னசி வட்டத்தின் தொல்பொருள் கழகத்தின் ஆரான் டிட்டர் வோல்வு (Aaron Deter-Wolf) மற்றும் அவரது குழுவினர் இந்த ஆய்வு முடிவை பிப்ரவரி 2016 ஜார்னல் ஆப் ஆர்கியாலஜிக்கல் சயன்சு இதழில் வெளியிட்டுள்ளனர். இருந்தும் சில அறிஞர்கள் சிலி மம்மி 6000 மற்றும் 8000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறவும் செய்கிறார்கள்

மேற்கோள்:

A. Deter-Wolf et al. The world’s oldest tattoos. Journal of Archaeological Science: Reports. Vol. 5, February 2016, p. 19. doi:10.1016/j.jasrep.2015.11.007.