எரிவாய் இன்றி உலகைச் சுற்றி வந்து சுரியஒளி விமானம் சாதனை

ஜெயஶ்ரீ
Thu Jan 14 2016 23:41:46 GMT+0300 (EAT)

ஜப்பானில் இருந்து புரப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் விமானம் 117 மணி நேரம், 52 நிமிடங்கள் கழித்து ஹவாயை வந்தடைந்தது. பசிஃபிக் பெருங்கடலைக் கடந்து வந்த இந்த விமானத்தை உருவாக்கியவர்கள், ஆன்ட்ரே போர்ச்பர்க் மற்றும் பெர்ட்ரான்டு பிக்கார்டு. இருவரும் ஸ்விட்சர்லான்டைச் சேர்ந்தவர்கள்.

‘சோலார் இம்பல்ஸ் 2’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமானம் ஹவாயின் கலேலா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் ஓட்டுனர் ஆன்ட்ரே போர்ச்பர்க், சூரிய ஒளியின் சக்தியால் இயங்கும் விமானத்தை அதிக நேரம் ஓட்டி உலக சாதனை படைத்தார். 7200 கிலோமீட்டர்கள் கடந்து புரியப்பட்ட இந்தச் சாதனையை சர்வதேச வளிபோக்கு கூட்டமைப்பு (International Aeronautical Federation) அங்கீகரிக்க உள்ளது.

பயணத்தின் போது ஆன்ட்ரே பல சவால்களை எதிர் கொண்டார். அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் போது உயிர்வளி(oxygen) முகமூடியை போட்டுக் கொண்டும், தேவையான அளவு ஓய்வு எடுத்து கொண்டும் கொந்தளிப்பான வானிலையின் போது விமானத்தின் ஆற்றலை அதிகப்படுத்தியும் சமாளித்தார். ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விமானத்தில் பயணித்ததன் மூலம் இந்த விமானத்தின் முக்கிய பாகங்கள் நன்கு செயல் படுகிறது என்று உறுதியாயிற்று. எரிவாயு பயன்படுத்தாமல் சூரிய ஒளி ஆற்றலை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் இந்த விமானம் கனவாகவே நின்றுவிடாமல் இன்று நிஜமாகியிருக்கிறது.

“இந்த அசாதாரண பயணத்தின் போது மொனாக்கோவில் உள்ள ‘மிஷன் கன்ட்ரோல் சென்டர்’ இன் குழு என் கண்களாகவும் காதுகளாகவும் இருந்து என்னை வழிநடத்தினர். நான் ஓய்வு எடுப்பதற்கும் விமானத்தின் ஆற்றல் அளவை அதிகப்படுத்தவும் உதவினர். மேலும் கணினியால் உருவாக்கப்பட்ட விமான உத்திகளை அனுப்பியும் உதவினார்கள். என் தொழில் கூட்டாளி பிக்கார்டு கனவு கண்டது போன்றே எரிவாயு இன்றி உலகைச் சுற்றி வந்துவிட்டோம்” என்று ஆன்ட்ரே மகிழ்ச்சி தெரிவித்தார்.

‘சோலார் இம்பல்ஸ்’ இன் தலைவரும் அதை முன்னின்று ஆரம்பித்து வைத்தவருமான பிக்கார்டு, “விமான ஓட்டுனராக ஆன்ட்ரே பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார். அவர் இந்த விமானத்தின் முன்மாதிரியை உருவாக்கிய தொழில்நுட்ப குழுவின் தலைவர். வான் பயணத்தில் மட்டுமல்ல புதுப்பிக்கவல்ல ஆற்றலிலும்(renewable energy) இதுவே முதல் முறை” என்று அறிவித்தார்.

ஆன்ட்ரே இதுவரை ஐந்து முறை இமயமலையை அதிக ஓய்வின்றி ஏறியிருக்கிறார். பிக்கார்டு ஏற்கனவே ஊதற்பை(balloon) கொண்டு உலகைச் சுற்றி வந்தவர்.

மாசு, காலநிலை மாற்றம், குறைந்து வரும் இயற்கை மூலப்பொருட்கள் போன்ற அச்சுறுத்தல்கள் இருப்பதால் கரிமவளிமம் வெளியேறுவதைக் குறைக்கவும் மின்சாரத்தைச் சேமிக்கவும் பிக்கார்டு இந்த முயற்சியை மேற்கொண்டார். இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ‘வருங்காலம் தூய்மையாக இருக்கிறது’ (Future Is Clean) என்ற பிரசாரத்தை இந்த குழு துவக்கியுள்ளது. இந்த திட்டத்தை ஆதரப்பவர்கள் www.futureisclean.org என்ற இணையதளத்தில் தங்களின் ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கிடைக்கும் ஆதரவைச் சுட்டிக்காட்டி, உலகம் முழுவதும் உள்ள அனைத்து அரசாங்கங்களையும் தூய்மையான தொழில்நுட்பத்தை மேற்கொள்ள வேண்டியும் காலநிலை மாற்றம் குறித்து பாரிஸ்ஸில் டிசம்பரில் ஐக்கிய நாடுகள் நடத்தவிருக்கும் மாநாட்டில் ‘க்யோடோ நெறிமுறை’யை புதுப்பிக்க வேண்டியும் உபயோகிக்க உள்ளனர்.

விமானம் ஓட்டும் போது, 24 மணி நேர கால இடைவெளியில், அதன் ஓட்டுனர் எட்டு முறை ஓய்வு எடுத்தார். விமானம் பறக்கும் உயரத்தைப் பொருத்து ஓய்வு நேரம் 5-20 நிமிடங்கள் வரை நீளும். அவர் தினசரி 2.4 கிலோ உணவும், 2.5 லிட்டர் குடி நீரும், ஒரு லிட்டர் விளையாட்டு பானத்தையும்(sports drink) குடித்தார். காலை உணவு, மதியம் முடிந்தவரை வீட்டில் சமைத்தது போன்ற உணவு, நொறுக்கு தீனியாக சாக்லேட்டும் உலர்ந்த பழங்களும் சாப்பிட்டார். கொடுக்கப்பட்ட உணவின் சத்து, உயரம் மற்றும் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும். அதிக உயரம் பறக்கும் போது ஓட்டுனர்களுக்கு பசி குறைவாகவே இருக்கும் என்றாலும் அதிக ஊட்டச்சத்து தேவை. இதையும் தாண்டி இயக்கமுடக்கத்தை தவிர்க்க ஆன்ட்ரே தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை யோகாசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வானூர்த்தி

உலகம் சுற்றும் பயணத்தின் அடுத்த கட்டமாக, பிக்கார்டு, ஃபீனிக்ஸ்ஸுக்கு பறக்க உள்ளார். பின்னர் அங்கிருந்து நியூயார்க், யூரோப், அபுதாபி ஆகிய நாடுகளுக்கு பயணிப்பார்.

குறிப்பு:

Solar Impulse. "Record-breaking solar flight reaches Hawaii after 5 nights and days airborne without fuel: Unlimited endurance is now proven thanks to clean technology." ScienceDaily. ScienceDaily, 3 July 2015.